ஆழம் தெரியாமல் காலை விட்ட சன் பிக்சர்ஸ்.. அட்லீயை தூக்கிக்கொண்டு ஓடிய ஓட்டம்

Sun Pictures Escaped: அட்லி, சன் பிக்சர்ஸ் தயாரிக்க ராம்சரனுடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. இந்த படத்திற்கு ராம்சரண் 280 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை கேட்டவுடன் சன் பிக்சர்ஸ் ஆடிப் போய் விட்டது. படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி தொகையை சம்பளமாக கேட்டுள்ளார் ராம்சரண்.

எப்பொழுதுமே ராம்சரண் படம் நல்ல பிசினஸ் ஆகும். இதை மனதில் வைத்துக் கொண்டு சன் பிக்சர்ஸ், அட்லீிடம் ராம்சரண் சம்பளத்தை படத்தின் பட்ஜெட்டில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. இதற்கு அட்லி மறுப்பு தெரிவிக்கவே இப்பொழுது படம் டிராப் ஆகிவிட்டது.

ஏற்கனவே அட்லீ, சல்மான் கானை வைத்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. இப்பொழுது சன் சன் பிக்சர்ஸ் இடம் சல்மான் கானை வைத்து படம் பண்ணுவதற்கு சம்மதம் வாங்கிவிட்டார். அடுத்த கட்டமாக சன் பிக்சர்ஸ் பாலிவுட் ஹீரோக்களையும் வலையில் வீழ்த்தியுள்ளது.

அட்லீயை தூக்கிக்கொண்டு ஓடிய ஓட்டம்

மேலும் அட்லீ இயக்கும் இந்த படம் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட். அதனால் இந்த படத்திற்கு இன்னொரு ஹீரோ ரன்வீர் சிங்காம். இவர்கள் இருவருக்கும் கொடுக்கும் சம்பளத்தை பேசாமல் ராம்சரனுக்கே கொடுத்து விடலாம் என அட்லீ யோசிக்கையில் அதற்கும் ஒரு செக் வைத்துள்ளது சன் பிக்சர்ஸ்.

ரன்வீர் சிங் மற்றும் சல்மான் கான் படம் என்றால் பாலிவுடில் நல்ல பிசினஸ் ஆகும் அதனால் இந்த படத்தில் நல்ல கலெக்ஷன் பார்க்கலாம் என்ற யோசனையில் உள்ளது.
இந்த படம் ஹிட் ஆகிவிட்டால் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் கானை மற்றும் ரன்வீர் சிங்கை வைத்து சாதித்துக் கொள்ளலாம் என்று சன் பிக்சர்ஸ் ஒரு ஸ்கெட்ச் போட்டுள்ளது. ராம்சரண் வேண்டாம் என சன் பிக்சர்ஸ் உறுதியாகிவிட்டது.

Next Story

- Advertisement -