தம்பியை தூக்கி விட லாரன்ஸ் எடுத்துள்ள முடிவு பலிக்குமா.? குடும்பமே பேயாக இருந்தால் எப்படி மாஸ்டர்

Actor Lawrance: லாரன்ஸ் படம் என்றாலே அது பேய் படமாக தான் இருக்கும் என்று ஒரு பிம்பத்தை போட்டு விட்டார். தற்போது இருக்கின்ற கம்ப்யூட்டர் காலங்களில் இந்த மாதிரியான படங்கள் எல்லாம் செல்லுபடி ஆகுமா என்பது ஒரு சந்தேகம் தான். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசமான ஒரு பேயை வைத்து மிரட்டி கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், துர்கா போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி பிஸியாகவே தற்போது இருக்கிறார். அந்த வகையில் சினிமாவிற்கு இவருடைய தம்பி எல்வினையும் ஒரு படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.

Also read: 4 பாகங்களாக உருவாகும் அருள்நிதியின் படம்.. லாரன்ஸ் போல் ஆகாமல் இருந்தால் சரிதான்

அந்தப் படத்தில் இவரும் ஒரு அரை மணி நேரம் நடிக்கிறார். இந்த படத்திற்கு புல்லட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை டைரி படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். அதை போல் இப்படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இவர் ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா போன்ற ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார்.

மேலும் லாரன்ஸ் போலவே இவருடைய தம்பியும் சினிமாவிற்குள் வருவதற்கு முன் அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டே நுழைந்திருக்கிறார். அண்ணன் எந்த அளவிற்கு பேரும் புகழும் சம்பாதித்திருக்கிறாரோ, அதில் ஒரு பங்காவது நாம் பெற வேண்டும் என்பதில் முழு முயற்சியுடன் பல பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

Also read: ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல.. நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் நிப்பாட்டிய ராகவா லாரன்ஸ்

இப்படம் ஆக்சன் திரில்லர் படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வைஷாலி ராஜ், ஆர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மேலும் புல்லட் படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாராக போகிறது.

மேலும் இந்த படமும் பேய் சம்பந்தப்பட்ட படமாக தான் இருக்கப் போகிறது. அதுவும் புல்லட் பைக்கில் பேய் இருப்பதாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பேயாக லாரன்ஸ் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்தப் படமும் பெருத்த லாபத்தை பார்க்கப் போகிறது. குடும்பமாக சேர்ந்து பேயாக நடித்து மிரட்டி வருகிறார்கள். ஒருவேளை பேய் குடும்பமா இருக்குமோ என்று பலரும் நக்கல் அடித்துக் கொண்டு வருகிறார்கள்.

Also read: காஞ்சனா படத்தால் வாழ்க்கையே போச்சு என கதறும் திருநங்கை.. கண்டு கொள்ளவில்லையா லாரன்ஸ்?

Sharing Is Caring:

அதிகம் படித்தவை