அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்க வந்த வைல்ட் கார்ட் என்ட்ரி.. சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு

ஏற்கனவே சந்த கடை போல் மாறி மாறி சண்டையும், கூச்சலும் ஆக இருக்கும் பிக் பாஸ் வீட்டில் தற்போது வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக ஒரு போட்டியாளர் உள்ளே நுழைந்து இருக்கிறார். எப்போதுமே பிக்பாஸ் வீட்டில் இதுபோன்று புது வரவாக யாராவது உள்ளே நுழைந்தால் அது அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு பதட்டத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். அது நேற்றைய எபிசோடில் நன்றாகவே தெரிந்தது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்று புதிய போட்டியாளர் உள்ளே செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மைனா நந்தினி அசத்தலாக என்ட்ரி கொடுத்தார். விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் அதற்காக கமலிடம் நன்றி கூறி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

Also read:மகேஸ்வரியுடன் குழாயடி சண்டைக்கு தயாராகும் போட்டியாளர்.. உச்சகட்ட மோதலில் பிக்பாஸ் வீடு

தன் குடும்பத்தை விட்டு பிரிய போவது வருத்தமாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிச்சயம் சுவாரஸ்யமாக மாற்றுவேன் என்று கூறி அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தார். புதுசாக யாரோ ஒருவர் வருகிறார் என்று தெரிந்த உடனே போட்டியாளர்கள் ஆர்வமாகவும் பதட்டமாகவும் காத்திருந்தனர். அப்போது மைனா மைனா என்ற பாடலுக்கு கையில் இறக்கையை அடித்துக் கொண்டு வந்த நந்தினியை பார்த்து பலரும் ஷாக் ஆகாத குறையாக நின்றனர்.

அதன்பின் ஒரு வாராக சமாளித்துக் கொண்டு அனைவரும் அவரை வெல்கம் செய்தனர். இதில் நந்தினியின் நெருங்கிய தோழியான ரட்சிதா முகத்தில் கண்டுபிடிக்க முடியாத ஒரு உணர்வுடன் நின்று கொண்டிருந்தார். ஒருவேளை நந்தினி வீட்டிற்குள் வந்தது அவருக்கு பிடிக்கவில்லையோ என்றுதான் அவர் முகத்தை பார்த்த ரசிகர்களுக்கு தெரிந்தது.

Also read:ஜிபி முத்துவுக்கு ஜோடியாகும் 2 பெண்கள்.. வயிற்றெரிச்சலில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள்

அதன் பிறகு ஒவ்வொருவரிடமும் அறிமுகம் முடிந்து வந்த நந்தினியிடம் ஷிவின் எனக்கு உங்கள் கணவரை ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். உடனே நந்தினி அவருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் அதை உன்னிடம் சொல்ல சொன்னார் என்று சொல்லி ஒருநாள் வீட்டுக்கு வாங்க என்று அழைப்பு விடுத்தார்.

உடனே ஷிவின் நிச்சயம் வருகிறேன். நீங்கள் வீட்டுக்கு திரும்பி வருவதற்கு முன் நான் உங்கள் வீட்டில் இருப்பேன் அக்கா என்று கூறினார். இதை எதிர்பார்க்காத நந்தினி யோகி எனக்கு துரோகம் பண்ணாத என்று விளையாட்டாக கூறினார். அதன் பிறகு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே இருந்த ரட்சிதாவிடம் நந்தினி சமாதானமாக பேசினார்.

நெருங்கிய தோழிகளாக இருந்தும் பிக் பாஸ் வீட்டுக்கு வர போகும் விஷயத்தை மறைத்ததால் தான் அவர் கோபமாக இருந்தார் என்பது பிறகுதான் அனைவருக்கும் தெரிந்தது. இப்படியாக நேற்று நந்தினியின் வருகை வீட்டிற்குள் ஒரு பதட்டத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இனிமேல் இந்த நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.

Also read:கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

- Advertisement -