விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏனென்றால் இந்த சீசனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா,தர்ஷா குப்தா மற்றும் கனி ஆகிய 8 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினார்.
மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, வீஜே பார்வதி, மணிமேகலை, ஷரத், சுனிதா, டிக்டாக் சக்தி ஆகியோர் பங்கேற்று தங்களது நகைச்சுவையால் ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.
இந்நிலையில் நேற்று நடந்த குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு முதல்நபராக கனி தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகினர்.
அதுபோல் ஷகிலா மட்டும் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனவே இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்ற செய்தி தற்போது ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கடும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2ல் வெற்றியாளர் பாபா பாஸ்கர் அல்லது அஸ்வின் ஆகியோர் இருவரில் ஒருவர்தான் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
இருப்பினும் இன்னும் ஒரு சில வாரத்தில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும் ஆகையால் அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.