Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விடாமுயற்சி படத்தின் கதாநாயகி யார்? வரிசையாக 5 நடிகைகளை களமிறக்கியுள்ள லைக்கா

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க 4 பாலிவுட் நடிகைகளும், 1 தென்னிந்திய நடிகையும் தேர்வாகியுள்ள நிலையில் அவர்களிடம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ajith-lyca-vidamuyarchi

நடிகர் அஜித்தின் நடிப்பில் இந்தாண்டு ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு ரிலீசான துணிவு படம் 300 கோடியை தாண்டி உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனிடையே அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. பல மாதங்களாக இப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் மகிழ்திருமேனி முதன்முதலாக அஜித்துடன் இணையவுள்ளார்.

இப்படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் கூடிய விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், அஜித் தற்போது வேர்ல்ட் டூர் சென்றுள்ளார். தனது பைக்கை எடுத்துக்கொண்டு இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இதனிடையே விடாமுயற்சி படத்தில் யார் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க போகிறார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Also Read: அஜித்தின் விடாமுயற்சியின் ஸ்டோரி இதுதான்.. அப்செட்டில் இருக்கும் மகிழ்திருமேனி

அந்த வகையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 5 நடிகைகளை தேர்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் 4 பாலிவுட் நடிகைகளும்,1 தென்னிந்திய நடிகையும் தேர்வாகியுள்ளனர். இதில் முதலாவதாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இவர் அண்மையில் பொன்னியின் செல்வன் பாகம் 1, 2 படங்களில் நந்தினியாக மிரட்டியிருந்தார்.

இதனிடையே இவரை இப்படத்தில் நடிக்க வைக்க லைக்கா நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. அடுத்தப்படியாக நடிகை கரீனா கபூர், இவர் தற்போது பாலிவுட்டில் சில படங்களில் கமிட்டாகியுள்ள நிலையில், அஜித்துக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க வைக்க பிளான் செய்துள்ளனர். மூன்றாவதாக நடிகை கத்ரினா கைப் இவர் தற்போது பாலிவுட்டில் எந்த படத்திலும் கமிட்டாகாமல் உள்ள நிலையில், தமிழில் விடாமுயற்சி படம் மூலம் அறிமுகம் செய்ய படக்குழு திட்டம் தீட்டியுள்ளது.

Also Read: பிரபுதேவாவுக்கு வந்த மிகப்பெரிய வாய்ப்பு.. ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க மறுத்த காரணம்!

நான்காவதாக நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய நாயகியான இவர் தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் பி.வாசுவின் சந்திரமுகி 2 படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே விடாமுயற்சி படத்தில் கங்கனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடைசியாக தமிழ், தெலுங்கு என 20 வருடங்கள் தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வரும் நடிகையான திரிஷாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அண்மையில் திரிஷாவின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1, 2 படங்களில் குந்தவை இளவரசியாக நடித்து ரசிகர்களை கொள்ளைக் கொண்டுள்ளார். மேலும் 14 வருடங்கள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் திரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கும் திரிஷா விடாமுயற்சி படத்தில் ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புள்ள நிலையில், திரிஷாவும் இந்த வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கல்யாணம் ஆகாமலேயே 40 வயதில் திரிஷா சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு.. லியோ ஜோடினா சும்மாவா!

Continue Reading
To Top