விஜய்யின் கொஞ்ச நஞ்ச மானத்தை மொத்தமாக வாங்கிய எஸ்ஏசி.. வாரிசு வசூல் உண்மையா?

SAC Speak About Varisu Collection: விஜய் தனது தந்தையின் அடையாளத்தால் சினிமாவில் நுழைந்தாலும் இப்போது அவருக்கான ஒரு கூட்டத்தையே உருவாக்கி இருக்கிறார். இதற்கு அவருடைய உழைப்பு, திறமை எல்லாமே காரணம்தான். ஆனாலும் சமீப காலமாக டாப் நடிகர்களின் படங்களின் வசூல் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது.

குறைந்த நாளிலேயே 300 கோடி, 400 கோடி என வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த சூழலில் வாரிசு படம் 300 கோடியை தாண்டி வசூல் செய்ததாக தமிழ்நாட்டு விநியோகஸ்தர் லலித் கூறியிருந்தார். ஆனால் இது உண்மை இல்லை என்பதை விஜய்யின் அப்பாவே கூறியிருக்கிறார்.

Also Read : இவங்கலாம் இயக்குனர்களா என ஆச்சரியமூட்டும் 5 நடிகர்கள்.. விஜய் படத்தை இயக்கிய கருங்காலி

அதாவது டாப் நடிகர்களின் படங்கள் அதிக வசூல் செய்யவில்லை என்றாலும் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பல கோடி வசூல் செய்ததாக அறிவிக்க ஒரு சூட்சமம் இருக்கிறது. அதாவது பெரிய நடிகர்களின் படங்கள் கோடிக்கணக்கில் வசூலை கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு இருக்கும் பிராண்ட் காரணமாக லாபத்தை கண்டிப்பாக கொடுக்கும்.

ஆகையால் முதல் படத்தில் அதிக வசூல் செய்ததாக அந்த ஹீரோவின் படத்தை அறிவித்தால் அடுத்ததாக அதே தயாரிப்பாளருக்கு ஹீரோ வாய்ப்பு கொடுப்பார் என்று எஸ்ஏசி கூறியிருக்கிறார். அதேதான் விஜய்யின் படத்திலும் நடந்திருக்கிறது. அதாவது வாரிசு படத்தை லலித் வினியோகம் செய்தார்.

Also Read : விஜய்யின் அரசியலை குறிவைத்து தட்டித் தூக்க நினைக்கும் அஜித்.. அடுக்கடுக்காக போட்டு இருக்கும் மாஸ்டர் பிளான்

இவர் பல கோடி அறிவித்த காரணத்தினால் தான் இப்போது லியோ படத்தின் வாய்ப்பை விஜய் லலித்துக்கு கொடுத்திருக்கிறார் என்று பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி வாரிசு படம் வெளியான சமயத்தில் அஜித்தின் துணிவு படமும் அதே நாளில் வெளியானது. ஒரே நேரத்தில் டாப் நடிகர்கள் படம் வெளியாகும் போது ஒருவரின் படம் எப்படி 300 கோடி வசூல் செய்ய முடியும்.

இதிலேயே வாரிசு படம் 300 கோடியை தொடவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் இது வாரிசு படத்திற்கு மட்டுமன்றி பெரும்பாலான தயாரிப்பாளர்கள் டாப் ஹீரோக்களின் படங்களில் இந்த யுக்தியை தான் கையாண்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது.

Also Read : நிறைய ஹிட் படங்களை கொடுத்து மாயமாக போன 5 இயக்குனர்கள்.. விஜய், விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்