சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மைக் மோகன் போல் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்.. மார்க்கெட்டை உடைக்க நடக்கும் சதி

Sivakarthikeyan-Mohan: சிவகார்த்திகேயன் இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்திருந்த மொத்த பெயரும் டேமேஜ் ஆகும் விதமாக சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது. இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயனுடன் இனி படம் பண்ண மாட்டேன் என்ற அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சினிமா விமர்சகர்கள் முதல் பல பிரபலங்களும் சிவகார்த்திகேயன் மீது தவறு இருப்பதாக சுட்டிக்காட்டி பேசி வருகிறார்கள். ஆனால் அவரது ரசிகர்கள் இப்போதுமே சிவகார்த்திகேயன் பக்கம் தான் இருக்கிறார்கள். அதுவும் அவரின் மார்க்கெட்டை உடைக்க தான் இவ்வாறு சூழ்ச்சி நடந்து வருவதாக கூறுகின்றனர்.

அதாவது சின்னத்திரையில் இருந்து வந்து தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறார். அதுவும் அவரது டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல் மிக விரைவில் நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டிருந்த சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாகிறது.

இவ்வாறு ஒரு வளர்ச்சி பாதையை நோக்கி சிவகார்த்திகேயன் சென்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இவ்வாறு பிரச்சனையை கிளப்பி உள்ளார்கள் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இதே போல் சம்பவம் முன்பு பிரபல ஹீரோ மைக் மோகனுக்கும் நடந்திருக்கிறது.

வெள்ளி விழா நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த மைக் மோகன் படங்கள் அப்போது ரஜினி, கமலை விட அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்து வந்தது. இவ்வாறு உச்சாணி கொம்பில் இருந்த போது தயாரிப்பாளர் ஒருவர் இவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக பத்திரிக்கையில் பேட்டி கொடுத்து விட்டார்.

அதன் பிறகு இந்த பிரச்சனை பூதாகரம் எடுக்க மைக் மோகனின் மார்க்கெட் காலி செய்யப்பட்டது. இதனால் அவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்களும் பெரிய அளவில் போகவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகிய மோகன் இப்போது மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். அதேபோல் தான் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உடைக்க இவ்வாறு சதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News