பார்த்திபன் பிரியா எடுக்கப் போகும் முடிவு என்ன..கேள்விக்குறியாகும் ஜீவா காவியாவின் வாழ்க்கை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஈரமான ரோஜாவே தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது காவியா யாரை காதலிக்கிறார் என்று தெரியாமல் இருந்த மொத்த குடும்பத்திற்கும் அவருடைய ரிசப்ஷனில் காவியா ஜீவா உடன் இருந்த வீடியோ அனைத்தையும் போட்டு காட்டிவிட்டார் பார்த்திபனின் அத்தை. இதை பார்த்த பிரியாவும் பார்த்திபனும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்.

குற்ற உணர்ச்சியில் காவியா தயவு செய்து வீடியோவை நிறுத்துங்கள் என்று கெஞ்சுகிறார். பிறகு பார்த்திபனின் அத்தை பார்த்திபனிடம் இப்போ புரியுதா உனக்கு காவியா பற்றி. உன் தம்பியை காதலித்து உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட குடும்பம் நடத்தணும்னு சொல்லிட்டு இருக்கிற காவியா உனக்கு முக்கியமா. இல்ல நீ தான் எனக்கு வேணும் சொல்லிட்டு உன்னையே மனசுல நினைச்சுகிட்டு இருக்க என் மகள் உனக்கு முக்கியமா என்று முடிவு நீயே பண்ணிக்கோ என்று கூறுகிறார்.

Also read: ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

இதைக் கேட்டு பார்த்திபன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார். காவ்யாவும் இதைப்பற்றி பார்த்திபனிடம் எதுவும் பேசாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். இதற்கிடையில் தற்போது தான் ஜீவாவை பற்றி பிரியா புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அவருடைய காதலை வெளிப்படுத்தி சந்தோஷமாக இருந்தார்கள். இந்த தருணத்தில் பிரியாவுக்கும் உண்மை தெரிந்ததால் பிரியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

ஆனால் இனிமேலும் இங்கே இருந்தா சரி இருக்காது என்று முடிவு பண்ணி வெளியே கிளம்பி விட்டார். பிறகு இவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பின்னாடியே ஜீவாவும் போயி என்னை மன்னித்துவிடு. நான் இப்பொழுது உண்மையாகவே உங்களை காதலிக்கிறேன் என்னுடைய காதல் உண்மையானது என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

Also read: சக்காளத்தி சண்டையை தொடங்கி வைத்த ராதிகா.. உருள போகும் கோபியின் தலை

இதைக் கேட்ட பிரியா நீ என்னை காதலிக்கவில்லை. காவியாவின் பிரதிபலனாக தான் நீ எனக்கு இருந்திருக்கிறாய். காவியா சிரித்தால் நீ என்னிடம் சிரித்து பேசினாய். அவளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்று கஷ்டத்தில் இருந்தால் அதை என்னிடம் வந்து கோபமாக வெளிப்படுத்தினாய். உன்னால இனிமேலும் மாற முடியாது நீ எப்போதுமே அவளை மட்டும் தான் மனதில் நினைத்துக் கொண்டே இருப்பாய் என்னை ஆள விடு என்று கிளம்புகிறார்.

இப்பொழுது தான் காவியாக்கும் ஜீவாக்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது என்று நினைத்திருக்கும் தருணத்தில் மறுபடியும் அவர்களுடைய வாழ்க்கை என்னவாகும் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இவர்களை உண்மையாகவே காதலித்துக் கொண்டு இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த பிரியாவும் பார்த்திபனும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக பார்த்திபன் காவியாவை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பிரியாவும் ஜீவாவை புரிந்து கொண்டு கூடிய சீக்கிரமே வாழ்வில் ஒன்று சேர்வார்கள்.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்