கமலுடன் விஜய் சேதுபதியை ஒப்பிட முடியாது.. பளிச்சுன்னு சொன்ன பிக் பாஸ் பிரபலம்

Bigg Boss : விஜய் டிவியின் டிஆர்பி கிங் ஆக இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார் கமல். இப்போது சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலுமே பிஸியாக இருந்து வருகிறார். இதனால் இந்த சீசன் அவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போய்விட்டது.

இதைத்தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அக்டோபர் 6 ஆம் தேதி கோலாகலமாக இந்நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்ல போகிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில் கமல் இடத்தில் யாரையும் ஒப்பிட முடியாது என பிக் பாஸ் பிரபலம் கூறியிருக்கிறார். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர்தான் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விஜய் சேதுபதி குறித்து பிக் பாஸ் பிரபலம் சொன்ன விஷயம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த ரக்ஷிதா கமல் இடத்தில் யாரையும் ஒப்பிட முடியாது என்று கூறியிருந்தார். சிறந்த ஆற்றல் மற்றும் அனுபவம் உடையவர் கமல்.

எந்த ஒரு தலைப்பு கொடுத்தாலும் அவரால் பேச முடியும். எந்த சூழ்நிலையும் புரிந்து கொண்டு கையாளுவதில் கைதேர்ந்தவர். எனவே கமல் இடத்தில் யாரையும் வைக்க முடியாது. மேலும் இந்த சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் ரக்ஷிதா கூறியுள்ளார்.

மேலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதுவும் விஜய் டிவி சர்ச்சையான போட்டியாளர்களை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடி எடுத்துள்ளது. ஆகையால் பிக் பாஸ் சீசன் 8 அனல் பறக்க போகிறது.

அனல் பறக்க போகும் பிக் பாஸ்

- Advertisement -spot_img

Trending News