Vijay Tv Serial: என்னதான் சின்னத்திரை ரசிகர்களை குளிர வைக்க ஏகப்பட்ட சீரியல்கள் வந்தாலும் தொடர்ந்து சீரியலை பார்த்துட்டு வருபவர்களுக்கு திடீரென்று அந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது என்று தெரிந்ததும் கவலைப்படுவது வழக்கம்தான். ஏனென்றால் அந்த நாடகம் நல்லா இருக்கோ இல்லையோ அந்த நேரத்தில் அதற்கான மனநிலையுடன் சீரியலை பார்த்து வந்தால்தான் அவர்களுக்கு ஒரு மன திருப்தி கிடைக்கும்.
அப்படி சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டி போட்டு ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதில் சன் டிவி மொத்தம் காலை மற்றும் மாலை என 18 சீரியல்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் மதியம் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கம்மிதான். அதிலும் அடித்து பிடித்து ஒரு சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து விடும்.
பிக் பாஸ்காக முடிவுக்கு வந்த சீரியல்
அப்படி மதியம் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் மக்களை கவர்ந்த ஒரு சீரியல் இனியா. இதில் விக்ரமின் நடிப்பையும் இவரின் சிரிப்பையும் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் கடந்த வருடம் இந்த சீரியலுக்கு கிடைத்த ஆதரவு போல் தற்போது இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கி வருவதால் இதை முடித்து விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.
அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில் இனியா சீரியல் முடியப்போகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்தாலும் ஒரு சில சீரியல்கள் ஏன் தான் இதெல்லாம் போடுகிறார்களோ, சீக்கிரம் முடித்து விடலாமே என்று சொல்லும் அளவிற்கு மொக்கையான சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வருகின்ற முத்தழகு சீரியல் தற்போது முடிய போகிறது.
அதற்கும் காரணம் அடுத்த மாதத்தில் இருந்து பிக் பாஸ் வருவதால் சீரியல் நேரத்தில் மாற்றம் ஏற்பட போகிறது. அதனால் இடைஞ்சலாக இருக்கும் முத்தழகு சீரியலுக்கு முடிவு கட்ட நேரத்தை ஒதுக்கி விட்டார்கள். இந்த இரண்டு சீரியல்களைத் தொடர்ந்து விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலும் சன் டிவியில் சுந்தரி சீரியலும் சீக்கிரத்தில் முடியப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- Sun Tv Serial: 1000 எபிசோடு தாண்டி முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்
- Vijay tv 5 Serial: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் விஜய் டிவியின் 5 சீரியலின் கதை
- Sun Tv : டிஆர்பிஐ குறைக்க சொந்த செலவில் சூனியம் வைத்த சன் டிவி