ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கண்ணீருடன் காதலனை கரம்பிடித்த சர்கார் பட நடிகை..

சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தனது கலக்கல் நடிப்பால் நாயகியாக வலம் வந்தவர் பிரபல நடிகை வைஷாலி தனிகா. இவர் கால்பதித்த இடங்களிலெல்லாம் வெற்றி கொடி கட்டி பறந்தார். முதன்முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

விஷாலின் கதகளி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் பல படவாய்ப்புகளை பெற்று நடிப்பு திறனை வெளிக்காட்டினார். இவரின் மற்ற படங்கள் காதல் கசக்குதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ, போன்ற பல படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது மொத்த நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தினார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு சின்னத்திரையில் மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, ராஜா ராணி என பல வெற்றித் தொடர்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது சன் தொலைக்காட்சியின் மகராசி மற்றும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை போன்ற நம்பர் ஒன் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சத்யதேவ் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பல தடைகளைத் தாண்டி தற்போது தனது காதல் கணவரை கண்ணீர் மல்க கைப்பற்றியுள்ளார்.

திருமணத்தின்போது ஆனந்த கண்ணீருடன் தனது கனவு நனவானதை உணர்ச்சிபொங்க வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.

இனி திருமணத்திற்குப் பிறகு இவரின் திரைப்பயணம் தொடருமா அல்லது முடியுமா என ரசிகர்கள் ஆர்வத்துடனும், ஏக்கத்துடனும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

serial-actress-cinemapettai99
serial-actress-cinemapettai99
- Advertisement -

Trending News