வாரிசு மட்டுமல்ல தளபதி 67 உடன் போட்டி போடவும் நாங்கள் ரெடி.. சுத்தி அடிக்கும் துணிவு படக்குழு

விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதிலும் வாரிசு படத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் இப்போதே இந்த இரண்டு படங்களின் அப்டேட்டுகள் மாறி மாறி வெளியாகி வருகிறது.

வெளிநாடுகளில் வாரிசு படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் துணிவு படத்திற்கு தான் கிடைக்கும் என பேசப்படுகிறது. இதனால் இங்கு வாரிசு படத்தின் வசூல் துணிவு படத்தால் பாதிக்கும் என்று சினிமா விமர்சகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : துணிவுக்கு முந்திய வாரிசு.. டீ கிளாஸ், கூலர்ஸ் உடன் பிரம்மாண்ட பேனர், தியேட்டரில் மாஸ் காட்டும் தளபதி

இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 5 தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்திற்கான பூஜை நடைபெற இருக்கிறது. ஆகையால் அன்று இந்த செய்தி தான் பரபரப்பாக பேசப்படும். ஆனால் அப்போதும் துணிவு படம் தான் பேசப்பட வேண்டும் என அஜித் திட்டம் தீட்டி உள்ளார்.

அதாவது டிசம்பர் 4ஆம் தேதி துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியிட அஜித் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் தளபதி 67 படத்தின் பூஜைக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் குறைய அதிக வாய்ப்புள்ளது. இப்போது விஜயின் வாரிசை தாண்டி தளபதி 67 படத்தை எதிர்க்க துணிவு படம் தயாராகி வருகிறது.

Also Read : வாரிசை அடுச்சு தூக்க நாள் குறித்த துணிவு.. அவசரப்பட்டு வாய்விட்டு விட்டோமோ என பயத்தில் தளபதி விஜய்

அதுமட்டுமின்றி ஜனவரி ஒன்றாம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. ஆகையால் இதற்கு முதல் நாள் அல்லது அடுத்த நாள் துணிவு படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

இப்படி விஜயின் எல்லா படத்தையும் சுத்தி சுத்தி அடிக்க துணிவு படம் தயாராகி வருகிறது. இதிலிருந்து விஜய் எவ்வாறு வாரிசு படத்தையும் மற்றும் தளபதி 67 படத்திற்கான அப்டேட்களை ரசிகர்களிடம் கொண்டு செல்லப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also Read : தளபதியின் வாரிசு பட சிக்கலுக்கு காரணம் இவர்தானாம்.. நம்ம செஞ்ச ஆப்ப நமக்கே சொருகிடாங்க!

Next Story

- Advertisement -