திருமணம் ஒருவரின் தொடக்கமும், முடிவும் அல்ல.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு வாய் திறந்த விஜே ரம்யா

சின்னத்திரை சேனல்களில் பிரபலமாக இருக்கும் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினியாக இருந்தவர் தான் விஜே ரம்யா. தற்போது இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன் இவர் உடற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் எழுதுவது என்று எப்போதுமே தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் திருமணம், வாடகைக்கு தாய் போன்ற பல விஷயங்கள் பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை சில வருடங்கள் கூட நீடிக்க வில்லை.

Also read: ஆதிராவின் செயலால் தலைகுனிந்த குணசேகரன்.. எதிர்நீச்சலில் நடக்கப் போகும் ட்விஸ்ட்

திருமணம் நடந்த மறு வருடமே இவர் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டார். அன்றிலிருந்து இப்போது வரை அவர் சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். அவருடைய இந்த விவாகரத்து குறித்து பல செய்திகள் வெளி வந்தாலும் தற்போது ரம்யா அதைப்பற்றி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதாவது அந்த ஏழு வருடங்களும் என் வாழ்க்கையில் இருளடைந்த பகுதியாக தான் இருந்தது.

திருமணம் என்பது ஒருவருடைய வாழ்வின் தொடக்கமோ, முடிவோ கிடையாது. மற்றவருடைய கட்டாயத்திற்காகவோ, ஆசைக்காகவோ நாம் எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது என்று அவர் தன் திருமண வாழ்க்கை குறித்து தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் திருமணம், குழந்தை என அனைத்தும் நம்முடைய விருப்பப்படி தான் அமைய வேண்டும். அதேபோன்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதும் அவரவர் விருப்பம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Also read: பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்.. 50 லட்சத்திற்கு மேல் அல்ல போகும் கில்லாடி

இதன் மூலம் அவருடைய திருமண வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வந்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் அது அனைத்தையும் கடந்து வந்திருக்கும் ரம்யா இப்போது பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனக்கென ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கும் இவர் அதில் பலருக்கும் உபயோகமான உடல் நல குறிப்புகள், பிட்னஸ் செய்திகள் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.

தற்போது தன்னுடைய வாழ்க்கையை இவர் தைரியமாக வாழ்ந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் சில சிக்கலையும் இவர் சந்தித்தாராம். அதாவது தொகுப்பாளராக மீடியாவுக்குள் இவர் வந்த போது தைரியமாக பேசக்கூட மாட்டாராம். ஆனால் இத்தனை வருட அனுபவத்தில் அவர் அனைத்தையும் கற்றுக் கொண்டதாகவும், இப்போது சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Also read: பிக்பாஸில் பணப்பெட்டியுடன் வெளியேறும் டம்மி போட்டியாளர்.. யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்

- Advertisement -