சித்ரா மேட்டரில் சின்னாபின்னமான VJ ரக்சன்.. 10 வருஷமா கட்டின பொண்டாட்டியை மறைக்க காரணம் இதுதானாம்!

விஜய் டிவியில் பிரபலமாக வலம் வந்த சித்ரா சமீபத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர வைத்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது தற்போது வரை வெளிவரவில்லை. பொதுவாகவே விஜய் டிவி பிரபலங்கள் என்றாலே மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதற்கும் காரணம் கேமரா முன் நல்லவர்கள் போலவும், அதற்கு வெளியே அவர்களது நடவடிக்கைகள் சரியில்லாததும் தான்.

பல பத்திரிகைகளில் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்களைப் பற்றிய செய்திகள் குறைந்தது ஒருநாளைக்கு ஒன்றாவது வந்துவிடும். அந்த வகையில் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

பல வருடங்களாக மீடியா துறையில் தனக்கென ஒரு தடம் பதிக்க முடியாமல் தவித்து வந்த சித்ராவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் பெரிய மரியாதையும் வரவேற்பும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அவர் கணவர் டார்ச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து vj ரக்சன் மற்றும் சித்ரா ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை ரக்சன் காட்டி மிரட்டியதால் தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்திகள் காட்டுத் தீயை விட வேகமாகப் பரவின.

இந்நிலையில் தனக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து தானாகவே முன்வந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் vj ரக்சன். சித்ரா பஞ்சாயத்தில் சிக்கி சின்னாபின்னமானதால் வேறு வழியில்லாமல் தனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பதை தெரிவித்துள்ளார்.

vj-rakshan-cinemapettai
vj-rakshan-cinemapettai

பெரும்பாலும் மீடியாவில் இருப்பவர்கள் தங்களுடைய மவுசு குறைந்து விடக்கூடாது என்பதற்காக தனது திருமணமானதை மறைத்து விடுவார்கள். அந்த வகையில் ரக்சன் பயன்படுத்திய யுக்தி அவருக்கே ஆபத்தாக அமைந்தது. மேலும் தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் ரக்சன் பற்றிய தவறான செய்திகள் அதிகமாக வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்