வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிக்பாஸில் நாளுக்கு நாள் மோசமாக ஆடும் பிரியங்கா.. ஆதாரத்துடன் ஸ்கெட்ச் போட்டு தூக்கி ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே தற்போது விறுவிறுப்புடன் சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் அபிஷேக் மற்றும் பிரியங்கா அடிக்கும் லூட்டி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா, நிரூப் கையில் கேமராவிற்கு தெரியாமல் கையை மறைத்து எழுதிக் காட்டிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த செயல் பிக்பாஸ் வீதியை மீறியதாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இதை வேறு யாரும் பார்க்காததால் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமானது.

இது ஒருபுறமிருக்க, பிரியங்கா நேற்று அக்ஷரா உடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஏனென்றால் அக்ஷரா, மதுமிதா கையில் ஏதோ எழுதி காண்பித்ததால், அவ்வாறு செய்வது தவறு தான் என்று பிரியங்கா மற்ற போட்டியாளர்கள் முன்பு அக்ஷராவை குற்றவாளி போல் கேள்வி கேட்டார்.

இதே செயலைத் தான் பிரியங்கா நிரூப் உடன் செய்ததை மறந்து கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அக்ஷராவை கேள்வி கேட்டது பிக்பாஸ் ரசிகர்களையே வியப்பில் ஆழ்த்தியது.

vj-priyanka-bb5-cinemapettai
vj-priyanka-bb5-cinemapettai

ஏனென்றால் தமிழகத்தில் தொகுப்பாளினிகளில் முன்னணி நட்சத்திரமாக திகழும் பிரியங்கா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட ஒரு சில நாட்களாக பிரியங்கா பிக்பாஸ் வீட்டையே கலகலப்புடன் வைத்திருந்ததை கண்ட ரசிகர்கள் இந்த சீசன் பட்டையை கிளப்பப் போகிறது என்று எதிர்பார்த்த நிலையில், நாளுக்கு நாள் பிரியங்காவின் நடவடிக்கை படு மோசமாகி கொண்டிருப்பதால் சோஷியல் மீடியாவில் பிரியங்காவை பிக்பாஸ் ரசிகர்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.

- Advertisement -

Trending News