சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சமுத்திரக்கனி உடன் நைட்டியில் ரொமான்ஸ் பண்ணும் VJ மகேஸ்வரி.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தான் சமுத்திரக்கனி. இவருக்கு தற்போது தமிழை விட தெலுங்கில் மார்க்கெட் அதிக மார்க்கெட் உள்ளது.

சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெறும் படங்களில் சமுத்திரகனி தான் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அளவைகுண்டபுரம்லோ, கிராக் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.

சமுத்திரக்கனி நம் படத்தில் நடித்தாலே அந்த படம் ஹிட் தான் எனுமளவுக்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களின் மனதில் ஒரு ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டாராம். அடுத்ததாக ராஜமவுலி இயக்கி வரும் ரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தில்கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க தமிழில் தன்னுடைய வயதிற்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து வித்தியாசமான நடிப்புகளையும் கொடுத்து வருகிறார் சமுத்திரக்கனி. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஏலே திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகிவரும் ரைட்டர் என்ற படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் சமுத்திரகனிக்கு ஜோடியாக தொகுப்பாளினி vj மகேஸ்வரியின் நடித்துள்ளார்.

vj-maheswari-samuthirakani
vj-maheswari-samuthirakani

மகேஸ்வரி ஏற்கனவே சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். ஹீரோயினாக அல்லது குணச்சித்திர நடிகையாக ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துவிட வேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கும் மகேஸ்வரிக்கு ரைட்டர் திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.

vj-maheswari-samuthirakani-01
vj-maheswari-samuthirakani-01
- Advertisement -

Trending News