வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இப்படி செஞ்சுட்டீங்களே.. பாண்டியன் ஸ்டோர் மூர்த்தியை திட்டித் தீர்த்த விஜே சித்ரா ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலை காண்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஏனென்றால் இந்த காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை கண்முன் கண்டித்ததால், பலரும் இந்த சீரியலை ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கப்பட்டு மூன்று வருடம் நிறைவடைந்துள்ளது. அதற்கு நன்றி கூறும் வகையில் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சோஷியல் மீடியாவில் தங்களது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சத்தியமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் முத்த அண்ணனாக நடிக்கும் ஸ்டாலின் முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் துவங்கப்பட்டு மூன்று வருடம் நிறைவடைந்துள்ளது.

இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சக நடிகர் நடிகைகளுக்கும், சீரியல் தொழில்நுட்ப குழுவினருக்கும் விஜய் டிவி நிர்வாகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி என்று ஸ்டாலின் முத்து கூறி உள்ளார்.

staline-cinemapettai
staline-cinemapettai

அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருக்கும் பிரபலங்களின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கும் நடிகர் நடிகைகளுடன் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா புகைப்படம் மட்டும் உள்ளது.

விஜே சித்ராவின் புகைப்படம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த விஜே சித்ராவின் ரசிகர்கள், பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலமடைய முக்கிய காரணம் விஜே சித்ரா நடித்த முல்லை மற்றும் கதிர் உடைய கெமிஸ்ட்ரி தான். அப்படி இருக்கும் பொழுது சித்திராவின் புகைப்படத்தையும் சேர்த்திருக்கலாமே, அவரை சுத்தமாக மறந்து விட்டீர்கள் போல என்று ரசிகர் ஒருவர் ஸ்டாலினின் திட்டி தீர்த்துள்ளார்.

- Advertisement -

Trending News