விஷ்ணு விஷாலை ஓரங்கட்டிய பூங்குழலி, சிரிப்பலையில் அதிரும் தியேட்டர்கள்.. கட்டா குஸ்தி முழு விமர்சனம்

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கியுள்ள கட்டா குஸ்தி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் புது தெம்புடன் உற்சாகமாக இந்த படத்தில் கலக்கி இருக்கிறார். அவரையே ஓரம் கட்டும் அளவுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அசத்தி இருக்கிறார்.

நல்லா மனசு விட்டு சிரிக்கணும்னு நினைக்கிறவங்க இந்த படத்தை தாராளமா பார்க்கலாம். அந்த அளவுக்கு இந்த படம் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சரி இப்போ கதைக்கு வருவோம். ஹீரோவான விஷ்ணு விஷாலுக்கு தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கிறது.

அதாவது தனக்கு வரப்போகும் மனைவிக்கு தலை முடி இடுப்புக்கு கீழ் நீளமாக இருக்க வேண்டும், தன்னைவிட குறைவாக படித்திருக்க வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறார். ஆனால் அதற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத கேரளாவில் பிறந்து வளர்ந்த கட்டா குஸ்தி வீராங்கனையான ஐஸ்வர்யா லட்சுமி அவருக்கு மனைவியாகிறார்.

Also read: விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி எப்படி இருக்கு.. விறுவிறுப்பாக வெளிவந்த டுவிட்டர் விமர்சனம்

வழக்கமான கணவர்களைப் போல் மனைவி தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் நினைக்கிறார். அதற்கு எதிர்மறையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி பற்றிய உண்மை அவருக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் இந்த படத்தின் கதை.

கொஞ்சம் கூட சலிக்காத வகையில் இருக்கும் இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஐஸ்வர்யா லட்சுமி பிரம்மிக்க வைக்கிறார். அதிலும் நிஜ வீரங்கனையே மிரளும் அளவுக்கு அவர் குஸ்தி போடுவது வேற லெவல். இதை பார்த்துவிட்டு இளம் பெண்கள் பலரும் குஸ்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: பிட்டு பட லெவெலுக்கு பப்ளிசிட்டிக்காக போஸ் கொடுத்த கணவன்.. வெட்கமில்லாமல் போட்டோ எடுத்த 2ம் மனைவி

அந்த அளவுக்கு இவர் தான் ஹீரோவாக படத்தை தாங்கி பிடிக்கிறார். இப்படி அவர் நடிப்பதற்கு இடம் கொடுத்துள்ள விஷ்ணு விஷாலை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அவரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். சொல்லப்போனால் அவர் பேச ஆரம்பித்தாலே தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது.

அவரைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் மாமாவாக வரும் கருணாஸ், நண்பராக வரும் காளி வெங்கட், முனீஸ் காந்த் என அனைவரும் பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஆக மொத்தம் பெண்களை உயர்வாக காட்டி இருக்கும் இந்தத் திரைப்படம் நிஜ சிங்கப் பெண்களுக்கு சமர்ப்பணம்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 3 / 5

Also read: விஷ்ணு விஷால் முன்னாள் மனைவி இந்த நடிகரின் மகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

Next Story

- Advertisement -