பூர்ணிமாவுக்கும் எனக்கும் நடுவுல ஒன்னும் இல்ல.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த விஷ்ணு

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியது ஆடியன்சுக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது. இந்த சீசன் தான் இதுவரை இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறது. அதனாலேயே எப்படா இதுக்கு எண்ட் கார்டு போடுவாங்க என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அதன்படி விஷ்ணு டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியாளராக மாறி இருக்கிறார். அதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வமும் இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி வருகின்றனர்.

அதில் விஷ்ணு பூர்ணிமா பற்றி பேசும்போது எங்களுக்குள் பர்சனல் ஆக எதுவுமே இல்லை என்று கூறியிருந்தார். உண்மையில் இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாக தான் இருக்கிறது.

Also read: அர்ச்சனாவின் நிறத்தை விமர்சித்தாரா விசித்ரா.? குள்ளநரி புத்தியை காட்டிய மாயா

ஏனென்றால் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து விஷ்ணு பூர்ணிமாவை கரெக்ட் செய்வதற்கு சில பல வேலைகளை பார்த்தார். அதிலும் ஒரு முறை மறைமுகமாக தன் காதலையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் பூர்ணிமா அதை ஏற்க மறுத்து விட்டார்.

அதன் பிறகு மாயா சொன்னதை கேட்டு மீண்டும் காதலை வளர்க்க அவர் முயற்சி செய்தார். ஆனால் இது கன்டென்டுக்காக என்பதை தெரிந்து கொண்ட விஷ்ணு ஒரேடியாக ஒதுங்கி விட்டார். அதை தொடர்ந்து இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாறி மாறி குறை சொல்லி வருகின்றனர்.

அதில் விஷ்ணு ஒரு படி மேலே போய் பூர்ணிமா மீது இருக்கும் காண்டை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும் இருவருக்கும் நடுவில் ஏதோ ஒன்று இருப்பது மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. அது நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே.. மாயாவின் வண்டவாளத்தை எடுத்து விட்ட விஷ்ணு