செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே.. மாயாவின் வண்டவாளத்தை எடுத்து விட்ட விஷ்ணு

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டினாலும் போட்டியாளர்களுக்குள் இன்னும் வன்மம் மட்டும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் மாயாவின் போக்கு நாளுக்கு நாள் கடுப்பை தான் வரவழைக்கிறது.

அதன்படி நேற்று பிக்பாஸ் கொடுத்த டாக்கில் போட்டியாளர்கள் மற்றவர்களை பற்றிய கருத்தை சொல்ல வேண்டும். அதில் விஷ்ணு பூர்ணிமா பற்றி பேசியது 100 சதவீதம் உண்மையாக இருக்கிறது. ஏற்கனவே அவர் யூகத்தின் அடிப்படையில் சொல்லும் ஒவ்வொன்றும் சரியாக பொருத்திப் போகும்.

அப்படித்தான் இப்போது பூர்ணிமா மற்றவர்களை தங்களுடைய விளையாட்டுக்கு பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி அவர் கூறியிருந்தார். இதற்கு முன்பாக விஷ்ணுவை வைத்து லவ் கன்டென்ட் அவர் கொடுக்க முயற்சித்தார். அதை நாசுக்காக கூறிய அவர் நல்ல திறமையான போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

Also read: பிக் பாஸ் சீசன் 7ல் பணப்பெட்டியை தூக்கியது இவர் தான்.. மக்களை ஏமாற்றிய வெற்றி போட்டியாளர்

மேலும் மற்றவர்களை உசுப்பேத்தி விட்டு காரியத்தை சாதித்துக் கொள்வதில் இவர் கில்லாடி என்று கூறினார். உடனே எதிரில் இருந்த மாயா நீங்கள் யாரைப் பற்றி சொல்கிறீர்கள் என்னையா? பூர்ணிமாவையா? என்று கேட்டார்.

உடனே விஷ்ணு கொஞ்சம் கூட யோசிக்காமல் நீங்க ரெண்டு பேரும் வேற வேற கிடையாது. ஒரே ஆள் தான் என்று சவுக்கடி பதிலை கொடுத்தார். இதைத்தான் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு இருவரும் நகமும் சதையும் போல ஒட்டி உறவாடி வருகின்றனர்.

அதிலும் பூர்ணிமா மாயாவுக்கு ஜால்ரா அடிப்பதும், தலையாட்டி பொம்மை போல் அவர் பேச்சைக் கேட்டு ஆடுவதும் அவருக்கே நெகடிவ் ஆக முடிந்திருக்கிறது. அதை அப்படியே கூறியிருக்கும் விஷ்ணுவுக்கு இப்போது பாராட்டுக்களும் குவிகிறது. ஆனாலும் இவர் கேரக்டரையும் புரிஞ்சுக்க முடியாது என்பதுதான் உண்மை.

Also read: அர்ச்சனாவின் நிறத்தை விமர்சித்தாரா விசித்ரா.? குள்ளநரி புத்தியை காட்டிய மாயா

Advertisement Amazon Prime Banner

Trending News