சூப்பர் ஹிட் டைரக்டருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. தொடர்ந்து அலைக்கழிக்கும் விஷால், கார்த்தி, ஜெயம் ரவி

சினிமாவில் திறமையுள்ள இயக்குனர்கள் எல்லோருக்கும் நல்ல நேரமும், கெட்ட நேரமும் இருக்கும். நல்ல கதைகளை வைத்துக் கொண்டு ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் அலைக்கழிக்கப்படும் டைரக்டர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

அப்படி ஜெயம் ரவியை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டு, அடுத்த கதையை ரெடி பண்ணி பல நடிகர்களிடம் கூறி வருகிறாராம் வளரும் இயக்குனர். அந்த ஹீரோக்கள் அனைவரும் கதை நன்றாக இருக்கிறது, இதை நிச்சயம் நாம் பண்ணலாம் என்று வாக்குறுதி கொடுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்காமல் இருக்கிறார்கள்.

Also Read: ஜிவி பிரகாஷ்-சை சங்கடத்தில் மாட்டி விட்ட பத்திரிக்கையாளர்.. நேர்த்தியான பதிலால் குவியும் பாராட்டு

2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து “அடங்கமறு” என்னும் படத்தை கொடுத்தவர் கார்த்திக் தங்கவேலு. இந்தப் படம் ஜெயம் ரவிக்கு நல்ல ஒரு பெயரை வாங்கித் தந்தது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்த படத்திற்கு பின்னர் அவர் பல தரமான கதைகளை எழுதி முடித்துவிட்டு ஹீரோக்களை தேடி வருகிறார். அப்படி அவர் விஷால், கார்த்தி, மற்றும் ஜெயம் ரவியிடம் கதைகளை சொல்லிவிட்டு காத்துக்கொண்டு இருக்கிறார்.

Also read: வாய்க் கொழுப்பால் மாட்டிக்கொண்ட சிரஞ்சீவி.. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட அமீர்கான்

ஆனால் அவர்கள் இன்று வரை அதைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுகின்றனர். இதனால் இப்பொழுது வேறு ஒரு ஹீரோவை நாடிச் சென்றுள்ளார் கார்த்திக் தங்கவேலு .

கடைசியாக அவர் அருண் விஜய்யிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரிடம் கதையை கூறி ஒப்புதலும் வாங்கி விட்டாராம். தற்சமயம் அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் கார்த்திக் தங்கவேலு. பெரிய ஹீரோக்கள் கைவிட்டாலும், அவருக்கு அருண் விஜய் சம்மதம் தெரிவித்து நடிக்கவிருக்கிறார்.

Also Read: விஜய்க்காக குரல் கொடுத்த அண்ணன்.. தம்பி படம் வரலைன்னா உங்க படத்தை வர விடமாட்டேன்

- Advertisement -