விஜய்க்காக குரல் கொடுத்த அண்ணன்.. தம்பி படம் வரலைன்னா உங்க படத்தை வர விடமாட்டேன்

நடிகர் விஜய் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வாரிசு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தீபாவளி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் அன்றைய தினம் ஆந்திராவில் மஹரசங்கராந்தி விடுமுறை என்பதால் இதுபோன்ற விழாக்காலங்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் முதல் உரிமை என்றும், என்னதான் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்கி, தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்து இருந்தாலும் நேரடி தமிழ்ப்படம் என்பதால் ரிலீஸ் செய்யக் கூடாது என தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியில் கெடுபிடி விதித்து இருக்கின்றனர்.

Also Read: நாலாபக்கமும் பிரச்சனையை சந்தித்து வரும் விஜய்யின் வாரிசு.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய தயாரிப்பாளர்

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் சீமான் நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இதுவரை தமிழ்நாட்டில் தெலுங்கு மற்றும் மலையாளப்படங்கள் திரையிடுவதில் எந்த சிக்கலும் ஏற்பட்டதில்லை. ஆனால் தமிழ் படத்திற்கு தெலுங்கில் பாரபட்சம் காட்டுவது தேவையில்லாத ஒன்று என கூறியிருக்கிறார்.

கலைக்கு மொழி பாகுபாடில்லை என்ற ஒரே நோக்கத்தில் மற்ற மொழி படங்களை ஆதரித்து பெருவாய்ப்பு வழங்கி வருகிறோம். KGF, ஆர்ஆர்ஆர், பாகுபலி போன்ற படங்களுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமங்களில் எந்த பாகுபாடும் காட்டியதில்லை. நடிகர் சங்கம் கூட, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரையே தாங்கி நிற்கிறது.

Also Read: உள்ளூர்ல தியேட்டர் இல்ல, வெளியூரில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்.. துணிவை விட 3 மடங்கு வியாபாரம் செய்த வாரிசு

விஜய் போன்ற முன்னணி நடிகரின் படத்துக்கே இவ்வளவு சிக்கல் என்றால் மற்ற நடிகர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்றும், மேலும் இது விஜய் என்ற ஒரு தனி நடிகருக்கு நடக்கும் பிரச்சனை இல்லை என்றும், இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே இழைக்கப்படும் அநீதி என்றும், இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சீமான் கூறியிருக்கிறார்.

மேலும் சீமான் தன்னுடைய அறிக்கையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இந்த முடிவை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதன் பின்னர் தெலுங்கு திரைப்படங்களை தமிழ்நாட்டில் வெளியிட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என வன்மையாக எச்சரிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Also Read: என்ன மீறி படத்தை ரிலீஸ் பண்ணிடுவியா.. விஜய்க்கு உதயநிதி போடும் ஸ்கெட்ச்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்