தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து துவண்டு போயிருக்கும் விஷால் தற்போது எப்படியாவது ஒரு வெற்றிப்படம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் வித விதமான கதைகளை தேர்வு செய்து வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக ஆர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் எனிமி என்ற படம் உருவாகி வருகிறது. விக்ரமுக்கு இருமுகன் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த எனிமி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இது விஷாலின் 30வது படமாம். படத்தின் மீது தற்போது கணிசமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக விஷால் தன்னுடைய 31வது படத்துக்கான வேலைகளை தொடங்கிவிட்டார். இதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தின் போஸ்டர்களை போல விஷால் பட போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விஷால் மற்றும் மிஷ்கின் ஆகிய இருவருக்கும் துப்பறிவாளன் படத்தில் பஞ்சாயத்து வந்த நிலையில் தற்போது அவரது படத்தின் போஸ்டரை போலவே தன்னுடைய படத்தின் போஸ்டரையும் உருவாக்கியது கோலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் படத்தின் போஸ்டர் வித்தியாசமாக உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சரவணன் என்பவர் இயக்க உள்ளார்.