அரைத்த மாவையே அரைத்து ஒரே கதையில் வெளிவந்த விஷாலின் 5 பிளாப் படங்கள்.. ரூட்டை மாற்றி காப்பாற்றிய இயக்குனர்

நடிகர் விஷால் ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். ‘தாமிரபரணி’, ‘சண்டக்கோழி’ திரைப்படங்களின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மக்கள் மனதில் நின்றார். ஆனால் அதன்பின்னர் அடுத்தடுத்த படங்களில் ஒரே மாதிரியான கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் மக்களுக்கும் இவர் நடிப்பின் மீது ஒரு வெறுப்பு உண்டானது. கேரியர் காலியாகும் நிலையில் இருந்த போது இயக்குனர் திருவின் நான் சிகப்பு மனிதன், சுசீந்திரனின் பாண்டியநாடு தான் விஷாலை காப்பாற்றியது.

மலைக்கோட்டை: விஷால், பிரியாமணி, ஊர்வசி, ஆசிஷ் வித்யார்த்தி நடித்து 2007ல் ரிலீஸ் ஆன படம் மலைக்கோட்டை. வில்லனிடம் இருந்து ஹீரோயினை காப்பாற்ற போராடும் ஹீரோவாக விஷால் நடித்து இருந்தார். படத்தின் பாடல்களும், காமெடியும் கூட அந்த அளவுக்கு ரசிக்கும் படி அமையவில்லை. மேலும் கதையும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

Also Read: சிம்பு, விஷாலை கழட்டிவிட்ட 3 நடிகைகள்.. வெளிநாட்டு மாப்பிள்ளைகளை கரம் பிடித்த மருமகள்கள்

தோரணை: நடிகர் விஷால், ஷ்ரேயா, சந்தானம், பொல்லாதவன் கிஷோர், அலி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த திரைப்படம் தோரணை. சின்ன வயதில் வீட்டை விட்டு போன அண்ணனை தேடி சென்னை வரும் விஷால் கிஷோர் தான் தன்னுடைய அண்ணன் என்று தெரிந்து கொண்டு அவரை மெயின் வில்லன் பிரகாஷ் ராஜிடம் இருந்து காப்பாற்றும் கதை தான் இந்த படம்.

வெடி: பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி, பூனம் கர், விவேக், சாயாஷி ஷிண்டே, ஊர்வசி ஆகியோர் நடித்த திரைப்படம் வெடி. கொல்கத்தாவில் வசிக்கும் தன்னுடைய தங்கையை தேடி சென்று வில்லன்களிடம் இருந்து விஷால் காப்பாற்றும் கதை தான் இந்த படம். இதில் விவேக்கின் காமெடி மட்டுமே ரசிக்கும் படி அமைந்திருந்தது.

Also Read: தானாக வந்து வலையில் சிக்கிய ஆடு.. பெரும் தொகையை கறக்க விஷால் போடும் பிளான்

பட்டத்து யானை: இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் நடித்த திரைப்படம் பட்டத்து யானை. தன்னுடைய வளர்ப்பு தங்கையை கொலை செய்யும் வில்லன் கும்பலை பழிவாங்கும் விஷால், அவர்களிடம் இருந்து தன்னையும், தன்னுடைய காதலியான ஐஸ்வர்யாவையும் பாதுகாப்பது தான் பட்டத்து யானை படத்தின் கதை.

கத்திச்சண்டை: இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் கத்திச்சண்ட. விஷால், தமன்னா, சூரி, வடிவேலு, ஜெகபதி பாபு ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். வழக்கம் போல வில்லன் கும்பலிடம் இருந்து தன்னுடைய காதலியையும் அவருடைய அண்ணனையும் காப்பாற்றும் ஆக்சன் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.

Also Read: தொடர் பிளாப், கடன் சுமை.. வாய்ப்பு கேட்டு தளபதியிடம் சரண்டரான நடிகர்