இன்னும் என்னென்ன கொடுமையை பார்க்கணுமோ.. முழு கண்ணம்மாவாக மாறிய வினுஷா தேவி!

விஜய் டிவியின் நம்பர்1 சீரியலாக இருந்து வருவது பாரதிகண்ணம்மா நெடுந்தொடர். இந்த சீரியலின் முக்கிய கருவே கண்ணம்மா கதாபாத்திரத்தை வைத்து தான் அமைந்துள்ளது. இந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் மாடலிங் துறையில் இருந்த ரோஷினி ஹரிப்ரியன் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆரம்பத்தில் நடிப்பில் அவ்வளவு அனுபவம் இல்லாத ரோஷினி, போகப்போக நடிப்பை பிச்சு உதறி விட்டார். அதன் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். திடீரென நடிகை ரோஷினி சீரியலில் இருந்து விலகிய தகவல் சமீபத்தில் வெளியாகி அவருடைய ரசிகர்களை சோகக் கடலில் மூழ்கடித்தது.

ஆனால் அதன் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாமல் இருந்தனர் படக்குழுவினர். தற்பொழுது நடிகை ரோஷினி விலகியுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் புதிய கண்ணம்மாவாக மாடல் மற்றும் நடிகை ஆன வினுஷா தேவி நடித்திருக்கிறார்.

இந்த ப்ரோமோவில் பாரதியும் கண்ணம்மாவும் ஆரம்பத்தில் காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்ததுவரை சீரியலின் ஒவ்வொரு அதிரடி காட்சிகளையும் புதிய கண்ணம்மாவை வைத்து படமாக்கியுள்ளனர்.

இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில், உடை பாவனை மற்றும் மேக்கப் என அனைத்திலும் பழைய கண்ணம்மாவாக நடித்த ரோஷினியை போலவே அச்சு அசலாக உருமாறி நடித்திருந்தார் நடிகை வினுஷா.

தற்பொழுது அந்த ப்ரோமோ வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இனி மக்களால் இந்த புதிய கண்ணம்மாவை ஏற்றுத்தான் ஆக வேண்டும். என்ன அதற்கு சில காலங்கள் எடுக்கலாம். மேலும் வினுஷா ரோஷினியை விட நன்றாக நடிக்க முயற்சி செய்தால் விரைவில் மக்களின் மனங்களில் இடம் பிடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்