பிறந்தநாள் கொண்டாடிய கண்ணம்மா.. மாடன் ட்ரெஸ்ஸில் கலக்கல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா தொடர் டி ஆர் பி ல் டாப் வரிசையில் இருக்கும். இத்தொடருக்கு என்றே எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளார்கள். ஆரம்பத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி மக்கள் மனதில் ஆழமாய்ப் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகினார்.

கண்ணம்மா கதாபாத்திரம் யாருக்கு பொருந்தும் என பல கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் கண்ணம்மா போல அச்சு அசலாக இருக்கும் வினுஷா தேவியை தேர்வு செய்தார்கள். வினுஷா சின்னத்திரையில் வாய்ப்புக்காக பல போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். அந்த போட்டோ சூட் மூலம் பாரதிகண்ணம்மா தொடரில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ரோஷினி எல்லார் மனதிலும் ஆழமாய் பதிந்ததால் வினுஷாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சம் இருந்தது. ஆனால் வினுஷாவின் நேர்த்தியான நடிப்பால் மக்கள் மனதில் கண்ணம்மாவாக பகிர்ந்துள்ளார். தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் செல்லும் பாரதிகண்ணம்மா தொடரில் இருவரும் சேர்வார்களா என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

கண்ணம்மா கதாபாத்திரத்தில் ஹோம்லியாக உள்ள வினுஷா டஸ்கி மாடல் ஆவார். இவர் ஏற்கெனவே டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமானவர். திமிரு படத்தில் வரும் ஷ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்தை வினுஷா அப்படியே இமிடேட் செய்திருந்தார். இவர் சுந்தரி தொடர் கேப்ரில்லா உடன் பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வினுஷா சமீபத்தில் கொண்டாடிய அவருடைய பிறந்தநாள் புகைப்படங்களை தனது சமூக ஊடக பகுதியில் பதிவிட்டுள்ளார். வினுஷாக்கு தற்போது 23 வயது தான் ஆகிறதாம். ஆனால் பாரதியின் கண்ணம்மா தொடரில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறார். பாரதிகண்ணம்மா தொடரில் அவரது நடிப்பின் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்வார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்