57 வயதில் விக்ரமின் அசர வைக்கும் சொத்து மதிப்பு.. தோல்வி துரத்தினாலும் வருடத்திற்கு இவ்வளவு சம்பளமா?

சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் படிப்படியாக முன்னேறியவர் நடிகர் சீயான் விக்ரம். ஆனால் இவருடைய சமீப கால படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காததால் தொடர்ந்து தோல்வியடைகிறது. இருப்பினும் மனம் தளராத விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இன்று விக்ரமின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் சீயான் விக்ரம் காட்டுவாசி போல் மிரட்டலான கெட்டப்பில் பயமுறுத்துகிறார். நிச்சயம் இந்த படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Also Read: மருதநாயகத்தை மிஞ்சிய விக்ரமின் தங்கலான் வீடியோ.. காட்டுவாசியாக வேட்டையாட வைத்த பா ரஞ்சித்

இந்நிலையில் விக்ரமின் ஒட்டுமொத்த சொத்து விபரம் எவ்வளவு என்ற தகவல்  வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்திற்கு பிறகு சீயான் விக்ரம் தனது செகண்ட் இன்னிங்சை துவங்கி, தற்போது 57 வயதிலும் வெறித்தனமான மாஸ் ஹீரோவாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ஆக நடித்து மிரட்டி உள்ளார்.

வரும் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுவதால் பட ப்ரமோஷனுக்காக முக்கியமான நகரங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே 500 கோடி வசூல் ஆன நிலையில், இரண்டாம் பாகத்தில் 1000 கோடியை தட்டி தூக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Also Read: கமலுடன் துணிந்து மோதும் விக்ரம்.. பலத்தை நிரூபிக்க எடுத்த கடைசி ஆயுதம்

இந்த படத்தின் மூலம் விக்ரமின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றுள்ளது. இதனால் தற்போது விக்ரம் புதிதாக கமிட் ஆகும் ஒரு படத்திற்கு 35 கோடிகள் வாங்கி வருகிறார். அது மட்டுமல்ல டிவி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். அதில் மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ள சியான் விக்ரம், மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக மாற்றி உள்ளார். மேலும் ஒரு வருடத்திற்கு மட்டும் விக்ரம் 2 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார். அவரது தற்போதைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 151 கோடிகள். இவ்வாறு 57 வயதிலும் சீயான் விக்ரம் தன்னுடைய அயராத உழைப்பினால் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருப்பது பலரையும் அசர வைத்துள்ளது.

Also Read: பா ரஞ்சித் கொடுத்த தங்கலான் அப்டேட்.. சிங்கிளாக வசூல் வேட்டையாட வரும் விக்ரம்

- Advertisement -spot_img

Trending News