தெரிஞ்சி சொல்றீங்களா, தெரியாம சொல்றீங்களா.. வெளியில் நடப்பதை அப்படியே கூறும் விக்ரமன்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட 100 நாட்களை நெருங்க உள்ளது. இதனால் இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் விருந்தினர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எலிமினேட்டான போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் புதிய தொடர்கள் அடுத்தடுத்த ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான பிரமோஷனுக்காக அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர். மேலும் பிரியங்கா, மாகாபா ஆனந்த்என விஜய் டிவியின் தொகுப்பாளர்களும் வருகை தந்தனர். இன்று பிக் பாஸ் வீட்டினுள் டிடி வந்துள்ளார்.

Also Read : ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. டைட்டிலை அடிக்க போகும் அதிர்ஷ்டசாலி

இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு பெற்ற போட்டியாளர் விக்ரமன். பத்திரிக்கையாளரான இவர் பல நல்ல கருத்துக்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் வைத்து வருகிறார். இப்போது கடந்த சில நாட்களாக வெளியில் தமிழ்நாட்டை தமிழகம் என்று கூறலாம் என ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆனால் இன்றைய எபிசோடில் விக்ரமன் தமிழ்நாட்டு என்று பெயர் வர காரணம் என்ன என்று சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து உள்ளார். அதாவது இன்றைக்கு தைத்திருநாளான பொங்கல் மட்டு அல்லாமல் தமிழ்நாடு என்று பெயர் வர காரணமான நாளும் இன்று தான் என்று டிடி இடம் கூறியுள்ளார்.

Also Read : 97 நாட்களில் ஏடிகே வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

தமிழ்நாடு என்று பெயர் பெற வேண்டும் என்பதற்காக சங்கரலிங்கனார் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இந்த பெயரை வாங்கி தந்துள்ளார். இவ்வாறு பலர் போராடி தான் தமிழ்நாடு என்ற பெயரை வாங்கித் தந்துள்ளார்கள் என விக்ரமன் கூறியிருந்தார்.

இதற்கு தொகுபாலனி டிடி கூறுகையில் தமிழ்நாடு என்ற வார்த்தை தமிழ்நாடு என்று மட்டுமே சொல்ல வேண்டுமா என விக்ரமனிடம் கேட்க ஆமாம் இதுதான் சரியான சொல் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் விக்ரமன் வெளியில் நடப்பதை தெரிந்து சொல்கிறாரா, தெரியாமல் சொல்கிறாரா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Also Read : வாரிசு படத்தில் ஒரு டயலாக் கூட இல்லாமல் அசிங்கப்பட்ட பிக் பாஸ் நடிகை.. குஷ்புக்கு இவங்க எவ்வளவோ பரவாயில்ல

- Advertisement -