சாவ துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இந்த வாழ்க்கை.. விக்ரமின் ஆக்ரோஷ தாண்டவம், தங்கலான் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Thangalaan Trailer: பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரமின் மிரட்டல் நடிப்பில் தங்கலான் உருவாகி இருக்கிறது. பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான வீடியோக்கள், போஸ்டர்கள் என அனைத்தும் புல்லரிக்க வைத்திருந்தது. அதிலும் விக்ரமின் தோற்றமும், ஒரு காட்சியில் அவர் ராஜநாகத்தை இரண்டாக பிச்சி எறியும் காட்சியும் மிரட்டலாக இருந்தது.

அதேபோல் இப்படத்திற்காக விக்ரம் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். அந்த வீடியோ காட்சிகளும் வைரலானது. அதையடுத்து இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பலரின் ஆர்வத்தையும் தூண்டி இருந்த தங்கலான் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

இதன் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. ஏற்கனவே இது கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த ஒரு மக்களின் கதை என இயக்குனர் தெரிவித்து இருந்தார். அதன்படி அங்கு தங்கத்தை எடுக்க வெள்ளைக்காரர்களால் அனுப்பப்படும் கூட்டத்தில் ஒருவராக விக்ரம் இருக்கிறார்.

வெறிபிடித்து வேட்டையாடும் விக்ரம்

அங்கு அவர்களுக்கு நடக்கும் பிரச்சினைதான் படத்தின் மையக் கருவாக இருக்கிறது. அதில் சூனியக்காரி ஆக வரும் மாளவிகா மோகனனின் தோற்றமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விக்ரமின் மனைவியாக வரும் பார்வதியும் கவனத்தை ஈர்த்துள்ளார். இது எல்லாவற்றிற்கும் மேலாக தன் இன மக்களுக்காக மதம் பிடித்த யானையாக மாறி வேட்டையாடும் விக்ரமின் ஆக்ரோஷ தாண்டவம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

பின்னணி இசை, சாக துணிந்தவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை என்பது போன்ற வசனங்கள், ஒளிப்பதிவு அனைத்துமே வேற லெவலில் உள்ளது. இதன் மூலம் பா ரஞ்சித் மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறார்.

ஆக மொத்தம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரமின் தரிசனத்தை காண ரசிகர்கள் இப்போது தயாராகிவிட்டனர். அதே சமயம் ஆக்ரோஷமாக வெளிவந்துள்ள இந்த தங்கலான் இந்த வருடத்தின் சிறந்த படமாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

வெறித்தனமாக வெளிவந்த தங்கலான் ட்ரெய்லர்

Next Story

- Advertisement -