வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நியாயமே இல்லாமல் தலை விரித்தாடும் விக்ரம்.. ஓவர் தலைக்கனத்தால் கர்ணன் பட இயக்குனர் விட்ட கண்ணீர்

Actor Vikram: பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிகவும் நேர்த்தியாக விக்ரம் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு முன்பே மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட கர்ணா என்ற படத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதன் பின் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

திடீரென விக்ரம் நடித்த கர்ணா படத்தின் டீசர் வெளிவந்து எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு விக்ரம் 2019 ஆம் ஆண்டு கமிட்டானார். அப்போது அவருடைய சம்பளம் வெறும் 19 கோடி தான். ஆனால் இப்போது விக்ரமின் ரேஞ்சே வேறு. அவருடைய ஒரு படத்திற்கான சம்பளம் மட்டும் 50 கோடி.

Also Read: அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

இப்படிப்பட்ட சூழலில் நான்கு வருடத்திற்கு முன்பு ட்ராப் ஆன கர்ணா படத்தை மீண்டும் எப்படி எடுப்பது என தெரியாமல் அந்த படத்தின் இயக்குனர் அலை மோதுகிறார். இருப்பினும் அந்தப் படத்தின் டீசரை விக்ரமுக்கு கூட தெரியாமல் திடீரென்று வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் படத்தின் ரெஸ்பான்ஸ் என்ன என்பதை பார்த்து விட்டார். இந்த படம் ஏற்கனவே 300 கோடி பட்ஜெட்டில் பிளான் போட்டு துவங்கப்பட்டது.

ஆனால் பாதியிலேயே அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆகிவிட்டார். அதன் பின் விக்ரம் இந்த படத்தை லைக்காவிடம் கொண்டு சென்றார். ஆனால் லைக்காவும் அந்த படத்தை முடிப்பதற்கு முன்வரவில்லை. அதன் பின் விக்ரம் வேறு படங்களில் கமிட் ஆகி நடிக்க சென்று விட்டார்.

Also Read: மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஜெயித்த 5 ஹீரோக்கள்.. கதை தேர்வில் தனித்துவம் காட்டும் விக்ரம்

கர்ணா பட இயக்குனர் ஆர்எஸ் விமல் மீதி படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்பதற்காகவே தான் இப்போது அந்த டீசரை வெளியிட்டு டிரெண்டாக்கி உள்ளார். இனிமேல் விக்ரம் இந்த படத்திற்காக பேசிய 19 கோடியை விட அதிகமாக சம்பளம் கொடுத்தால் மட்டுமே படத்தில் நடிக்க ஒத்துக் கொள்வார்.

இப்படி நியாயமே இல்லாமல் தலைவிரித்தாடும் விக்ரமின் ஓவர் திமிரால் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் கர்ணா பட இயக்குனர் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார். இருப்பினும் 3டி தொழில்நுட்பத்தில் விக்ரம் மிரட்டலான கெட்டப்பில் தோன்றிய இந்த படத்தை தயாரிப்பாளர்கள் முன்வந்து தயாரிக்க வேண்டும் என ரசிகர்களும் விரும்புகின்றனர்.

Also Read: தள்ளிப்போகும் தங்கலான் ரிலீஸ்.. கௌதம் மேனனுடன் சேர்ந்து டபுள் ட்ரீட் கொடுக்க தயாராகும் விக்ரம்

- Advertisement -

Trending News