கொக்கி குமாரிடம் மாட்டிக் கொண்ட இனியா.. ஆக்ஷன் கிங் ஆக மாறிய விக்ரம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற இனியா தொடர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கிறது. இதில் எதில்நீச்சல் குணசேகரனைப் போல் ஒரு கேரக்டர் என்றால் அது நல்ல சிவம் தான். ஒருவேளை இவர் தான் அவருடைய அண்ணனாக இருப்பாரோ என்பதற்கு ஏற்றார் போல் அவரை மிஞ்சும் அளவிற்கு பெண்கள் ஆண்களின் அடிமைகள் தான் என்று முற்போக்காக நினைக்கக் கூடியவராக இருக்கிறார்.

அங்கு எப்படி அவருடைய கொட்டத்தை அடக்குவதற்கு ஜனனி என்று ஒரு கேரக்டர் இருக்கிறதோ அதேபோல் இங்கே இனியாவை சொல்லலாம். ஆனால் ஜனனி மாதிரி அமைதியாய் இருந்து காரியத்தை சாதிக்கக் கூடியவர் இல்லை இனியா. பதிலுக்கு பதில் உடனே கொடுத்து மாமனாருக்கு பதிலடி கொடுத்து விடுகிறார். அதே நேரத்தில் இனியா என்ன பண்ணாலும் சரிதான் என்று இவருக்கு சப்போர்ட்டாக விக்ரம் இருக்கிறார்.

Also read: பக்காவாக காய் நகர்த்தும் ஜனனி.. மாட்டிக்கொண்டு முழிக்க போகும் குணசேகரன்

எதற்கெடுத்தாலும் பெண்களை மட்டமாக பேசி அவர்கள் குடும்பத்தில் இருக்கும் வேலைக்காரிகள் தான் என்று மனதில் நினைத்து அவர்களை அடிமையாகும் விக்ரமின் அப்பாவிற்கு எதிராக, தான் நினைத்ததை எல்லாத்தையும் செய்து முடிக்க வேண்டும். அதே நேரத்தில் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று இனியா நினைக்கிறார். இவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைப்பதை விக்ரமின் வேலையாக இருக்கிறது.

இனியா வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லியும் அதைக் கேட்காமல் விக்ரம் என் மனைவி வேலைக்கு போகணுமா இல்லையா என்று நான் முடிவு எடுத்துக்கிறேன். நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிறகு இனியா இதையெல்லாம் சமாளித்து வேலைக்கு போன பிறகு இவரை எப்படியாவது பலி வாங்க வேண்டும் என்று நினைக்கும் கொக்கி குமாரிடம் மாட்டிக் கொள்கிறார்.

Also read: கொக்கி குமாருக்கு, விக்ரம் கொடுக்கும் அடி.. குடும்ப சண்டை ஆரம்பித்த இனியா

இவரிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் இனியாவை காப்பாற்றுவதற்கு ஆக்சன் கிங் ஆக விக்ரம் களத்தில் இறங்குகிறார். இனியாவை யாராவது சொன்னாலே வச்சு பார்க்க மாட்டாரு அப்போ இந்த அளவுக்கு ஆனதுக்கு பிறகும் கொக்கி குமார விட்டு வைப்பாரா என. வேற லெவல்ல விக்ரம் மாஸ் காட்டி இனியாவை காப்பாற்றி விடுகிறார். பிறகு இனியா கேட்டபடி ஹனிமூன் ஏற்பாட்டுக்கு வேலை நடக்கிறது.

அதில் விக்ரம் மற்றும் இனியா அவர்களின் அக்கா தம்பிக்கு துணையாக மட்டும் தான் போகிறோம் என்று முடிவில் தீர்க்கமாக இருக்கிறார்கள். இன்னும் அங்க போய் என்னென்ன பிரச்சனைகள் நடக்க இருக்கிறதோ என்று பார்க்கலாம். ஏனென்றால் சீரியல் என்றாலே முக்கியமான சீனில் பிரச்சனை தான் வரும்.

Also read: ஐஸ்வர்யாவின் ஆடம்பரத்தால் நெற்கதியாக நிற்கும் கண்ணன்.. பகடைக்கையாக மாட்டிக்கொண்ட கதிர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்