திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சைலன்ட் கில்லர் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் விக்ரம்.. இனியாவை பழிக்குப் பழி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற இனியா தொடர் விக்ரம் நடிப்பிற்காகவே ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆனால் இவர் ஆரம்பத்தில் வில்லனாக வந்திருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அடுத்ததாக இனியாவை பார்த்த பிறகு இவர் முழுவதுமாக மாறி இனியாவை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் இவர் முன்னாடி செய்த பாவத்தின் காரணமாக இனியா இவரை போலீஸிடம் ஒப்படைத்தார்.

பிறகு அவருக்கும் அந்த தப்புக்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்ததும் போராடி விக்ரமை புரிந்துகொண்டு அந்த கேசில் இருந்து வெளிக்கொண்டு வந்தார். அதன் பிறகு இனியா, விக்ரம் மீது ஓவர் ரொமான்ஸ் காட்டி வருகிறார். எப்பொழுதும் விக்ரம் தான் அப்படி இருப்பார் என்று பார்த்தால் அதற்கு எதிர்மறையாக இனியா ஜொள்ளு விட்டு பார்க்க கொஞ்சம் சகிக்கிலதான் ஆனால் விக்ரம் காக பார்க்கலாம்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

அடுத்ததாக விக்ரம் இனியவை பிரிப்பதற்காக நல்ல சிவம் மற்றும் அவருடைய தங்கைகள் ஒவ்வொரு சதி வேலைகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தெரிந்த இனியா எந்த காரணத்திற்காகவும் நான் விக்ரமை விட்டுக் கொடுக்க மாட்டேன். அவரும் நான் இல்லாமல் இருக்க மாட்டார் என்று நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆனால் இவர்களை எப்படியாவது பிரித்தே தீர வேண்டும் என்று நல்ல சிவம் கங்கணம் கட்டி அலைகிறார். அதற்கு ஏற்ற மாதிரி குடும்ப கௌரவத்தை கெடுக்கும் விதமாக நியூஸ் பேப்பரில் விக்ரம் மற்றும் அவருடைய அப்பா போட்டோ வைத்து தாறுமாறாக எழுதி தன் கணவர் தப்பு செய்தார் என்று தெரிந்தும் துணிச்சலாக போலீஸிடம் ஒப்படைத்த இனியாவுக்கு பாராட்டுக்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.

Also read: பாக்கியா உனக்கு இந்த பொழப்பு தேவையா.. ராதிகா கோபி பேசுறத ஒட்டு கேட்கும் நிலைமை

இதை பார்த்து நல்லசிவம் ஓவராக பேசி விக்ரமை தூண்டி விடுகிறார். அவரும் இதை பார்த்து டென்ஷன் ஆகி இனியா மேல் கோபப்படுகிறார். ஆனால் இதற்கு பின்னாடி கண்டிப்பா நல்ல சிவம் பிளான் தான் இருக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் விக்ரம் உடைய நடவடிக்கையை பார்க்கும் பொழுது இவர் உண்மையிலேயே இனியவுக்காக திருந்தி விட்டாரா. அல்லது இனியாவை பழி வாங்குவதற்காக தான் நல்லவராக நடிக்கிறாரா என்று ஒரு குழப்பம் இருந்து கொண்டே வருகிறது.

ஆனால் ஒவ்வொரு முறையும் விக்ரம் ஏதாவது ஒரு விஷயத்தில் இனியாவை சைலண்டாக டார்ச்சர் செய்து கொண்டு தான் இருக்கிறார். இதற்கு இடையில் இனியாவிடம் உன் அம்மாவின் ஆசைப்படி நான் எல்லா விஷயத்தையும் நிறைவேற்றுவேன் மருமகனாக இல்ல மகனாக இருந்து செய்வேன் என்று கூறியிருக்கிறார். உண்மையில் இவர் நல்லவரா கெட்டவரா. ஆனாலும் இந்த நாடகத்தை பொருத்தவரை கதைக்கேற்ற மாதிரி எப்படி வேணாலும் மாத்திக் கொள்வாங்க. பார்க்கலாம் இனி விக்ரமின் ஆட்டத்தையும் இனியாவின் நிலைமையும் எப்படி அமைகிறது என்று.

Also read: குணசேகரனை தோற்கடிக்க ஜனனி பண்ணும் சதி.. ஈஸ்வரி கதிருக்கு கொடுக்கும் பதிலடி

- Advertisement -

Trending News