வேதாவை கூப்பிட்டு ஊரெல்லாம் தம்பட்டமடிக்கும் விக்ரம்.. தன்வி மூளையை சலவை செய்யப்போகும் மிர்னாலினி

Modhalum kadhalum Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மோதலும் காதலும் சீரியலில், எதிரும் புதிருமாக இருந்த விக்ரம் வேதா தற்போது ஜோடி புறாக்களாக மாறிவிட்டார்கள். இவர்களுடைய காதலை இன்னும் வலுப்படுத்தும் விதமாக இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் யோசித்தார்கள்.

ஆனால் வேதாவிற்கு குழந்தை பெற பாக்கியம் இல்லாததால் தன்வி மட்டுமே போதும் என்று வாழ்ந்து வந்தார்கள். பிறகு விக்ரமின் அத்தை செய்த சித்த வைத்தியம் மூலம் வேதாவிற்கு குழந்தை பிறக்க இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டார். இதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்த விக்ரம், வேதாவை கூப்பிட்டு எல்லா டெஸ்டுகளையும் எடுக்க போயிருந்தார்.

தற்போது இதற்கான ரிசல்ட் என்ன என்று கேட்பதற்காக வேதா மற்றும் விக்ரம் மருத்துவமனைக்கு போயிருக்கிறார்கள். ஆனால் டாக்டர் பதில் சொல்லுவதற்கு முன் வேதா ரிசல்ட் நினைத்து ரொம்பவே பயத்தில் புலம்ப ஆரம்பித்து விட்டார். பிறகு வேதாவிற்கு தைரியம் சொல்லி நீ தான் எங்க குடும்பத்துக்கு ரொம்ப முக்கியம். ரிசல்ட் எப்படி இருந்தாலும் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் படுத்தினார்.

அடுத்து டாக்டர் கூப்பிட்டு வேதா விக்ரமிடம் இனி குழந்தை பிறப்பதற்கு வேதாவிற்கு எந்த தடையும் இல்லை. கர்ப்பப்பை பிரச்சனை சரியாகிவிட்டது என்று சொல்லிவிட்டார். இதைக் கேட்ட விக்ரம் வேதா ரொம்பவே சந்தோஷத்தில் குதூகலமாக ஆகிவிட்டார்கள். உடனே இந்த சந்தோசத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டும் என்று வேதா விக்ரமிடம் சொன்னார்.

குட்டையை கிளப்ப வரும் மிர்னாலினி

ஆனால் விக்ரம் முதலில் வேதாவை கூட்டிட்டு கோகிலா அத்தை வீட்டிற்கு போகிறார். இவர் யாரென்றால் வேதா குழந்தை பெற முடியாத ஒரு மலட்டு பெண் என்று அவமானப்படுத்தியவர். அதனால் விக்ரம் முதலில் இவரிடம் வந்து வேதா இனி குழந்தையை பெற்றெடுக்கலாம் என்று சொல்லி தம்பட்டம் அடித்துவிட்டார். பிறகு இந்த உண்மை மிர்னாலினி காதுக்கு போகப்போகிறது.

இந்த ஒரு விஷயத்தை வைத்து தன்வி மனசை மாற்றி தன்னுடனே கூட்டிட்டு வந்து விட வேண்டும் என்று மிர்னாலினி திட்டம் தீட்ட போகிறார். இதனால் விக்ரம் வேதாவிற்கு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்