புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இப்பவும் வசூல் வேட்டையாடும் விக்ரம்.. உலகம் முழுவதும் இத்தனை கோடியா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் விக்ரம் படம் தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்து வருகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமா இது போன்ற ஒரு மாபெரும் வெற்றி படத்தை பார்த்ததில்லை.

உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் உலக நாயகன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து இருந்தார். தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருந்தது.

மேலும் விக்ரம் படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் பல திரைப்பிரபலங்கள் விக்ரம் படத்திற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்.

கமலஹாசனின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதனால் கமல் விக்ரம் படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கி வந்தார். இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு கோடி மதிப்பிலான காரை பரிசாக வழங்கி இருந்தார்.

இந்நிலையில் விக்ரம் படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் அதிக வசூல் செய்த வருகிறது. தற்போது விக்ரம் படம் ஆறு வாரங்கள் கடந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 175 கோடி வசூல் செய்தது. அது மட்டுமல்லாமல் உலக அளவில் 420 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக விக்ரம் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் விக்ரம்படம் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்ரம் படத்தின் வெற்றி கமலுக்கு மீண்டும் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த பாடங்களில் கவனம் செலுத்த உள்ளார் கமலஹாசன்.

- Advertisement -

Trending News