கேஜிஎஃப் 2, பாகுபலி 2 வசூலை முறியடித்த விக்ரம்.. திரையரங்கு உரிமையாளர் பேட்டி

ஒரு படத்தின் வெற்றி என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என விக்ரம் படத்தை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இத்தனை ஆண்டுகளாக ரஜினி, விஜய் படங்கள் மட்டுமே அதிக வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் வரிசையில் இடம் பெற்றிருந்தது. அதில் கமல் படம் இடம் பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஆழ்த்தியிருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி வரும் விக்ரம் படம் ரஜினி, விஜய் போன்ற நடிகர்களை பின்னுக்குத்தள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. மேலும் தற்போது வரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது.

தற்போது திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழ்நாட்டில் வசூல் செய்த அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் விக்ரம் படம் முறியடித்து உள்ளதாக கூறியுள்ளார்.

பான் இந்திய படங்களாக வெளியான பாகுபலி 2, கே ஜி எஃப் 2 போன்ற படங்களின் வசூலையும் தமிழ்நாட்டில் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் படம் முறியடித்தது ஆக அறிவித்துள்ளார். மேலும் விக்ரம் படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தை மட்டும் தான் பெற்றுத் தந்ததாக அவர் கூறியுள்ளார்.

கமலஹாசன் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி சின்னத்திரை மற்றும் அரசியலில் ஈடுபட்டு வந்தார். இதனால் மீண்டும் கமல் சினிமா பக்கம் வர மாட்டார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வந்தது. ஆனால் அவற்றுக்கெல்லாம் தரமான கம்பேக் மூலம் விக்ரம் படத்தை தந்து சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் விக்ரம் படம் தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. மேலும் விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்க மீண்டும் லோக்கேஷின் படம் தான் வரவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் விக்ரம் படத்தின் இமாலய வெற்றியால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

Next Story

- Advertisement -