ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய் உடன் மோதிப் பார்க்க நாள் குறித்த பா ரஞ்சித்.. செகண்ட் இன்னிங்ஸ் தொடங்க போகும் விக்ரம்

விக்ரம் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

மேலும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 90% படப்பிடிப்பு இப்போது முடிந்துள்ளது. இன்னும் முக்கிய சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாம். ஏற்கனவே இப்படத்தை மூன்று மாதத்திற்குள் எடுத்து முடிக்க பா ரஞ்சித் திட்டம் தீட்டி இருந்தார்.

Also read: கதை கேட்க கூட விருப்பமில்ல, அவரோடு செட்டே ஆகாது.. இயக்குனருக்கு டகால்டி கொடுக்கும் விஜய்

ஏனென்றால் இடைவெளி விடாமல் தொடர்ச்சியாக ஒரே கட்டமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அதன்படி இப்போது தங்களான் படத்தை விஜய்யின் லியோ படத்துடன் மோத விட போகிறார் பா ரஞ்சித். அதாவது லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சூழலில் விக்ரமின் தங்கலான் படமும் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு முன்னதாகவே விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படமும் வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தாலும் நிறைய திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

Also read: விஜய் ஒதுக்கி வைத்ததால் இந்த வயசிலும் சீரியலில் நடிக்க வந்த எஸ்ஏசி.. உறுதி செய்த கிழக்கு வாசல் புகைப்படங்கள்

ஆனால் விக்ரம் தனித்துவமாக நடித்த படங்கள் சரிவர போகாததால் தங்கலான் படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் படப்பிடிப்பு முடிந்த கையோடு மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் அதற்கான அறிவிப்பும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் லியோ படத்துடன் தங்கலான் படம் வெளியாக உள்ளதால் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

Also read: சூடு பிடித்த லியோ வெளிநாட்டு வியாபாரம்.. மாஸ்டரை காட்டிலும் 4 மடங்கு அதிக பிசினஸ்

- Advertisement -

Trending News