ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கமலின் கனவு படத்தில் நடிக்க துணிந்த விக்ரம்.. உண்மையை போட்டுடைத்த விக்ரம் பட ஏஜென்ட்

சினிமாவில் வித்தியாசமாக பார்க்கக்கூடிய உலக நாயகன் கமலஹாசன் பல வருடங்களாக தன்னுடைய கனவு திரைப்படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அந்தப் படத்தின் கதாநாயகனாக விக்ரமையும் நடிக்க வைக்க உலகநாயகன் திட்டமிட்டுள்ளார். இதில் நடிக்கவும் சியான் விக்ரம் ஒத்துக்கொண்டார். தற்போது சியான் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் கெட்டப்பை பார்த்துவிட்டு சியான் விக்ரம் தான் தன்னுடைய கனவு படத்திற்கு சரியான ஹீரோ என்பதால் அவரை  தன்னுடைய படத்திற்கு ஹீரோவாக லாக் செய்துள்ளார். அதாவது கமலஹாசனின் கனவு திரைப்படம் என்றால் அது மருதநாயகம் தான். 1997ல் பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட இந்த படம் பட்ஜெட் பிரச்சனை காரணமாக பாதியிலேயே டிராப் ஆனது. அதன் பின் லோகேஷின் விக்ரம் படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற கமல், மீண்டும் மருதநாயகம் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

Also Read: கமல் நடிப்பில் வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. அத்து மீறியதால் சென்சார் போர்டு வச்ச ஆப்பு

முதலில் மருதநாயகம் கேரக்டரில் கமல் தான் நடிப்பதாக இருந்தது. அதற்கான போஸ்டர்களும் வெளியாகி சோசியல் மீடியாவை மிரட்டியது. ஆனால் இப்போது மருதநாயகம் படத்தில் கமலுக்கு பதிலாக சியான் விக்ரம் நடிக்கப் போகிறார். இந்த படத்தை கமலஹாசனே இயக்கி சொந்தமாகவும்  தயாரிக்கிறார். இதில் 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக  கிளர்ச்சி செய்த முகமது யூசுப் கான் என்ற மருதநாயகம் பற்றிய கதைதான் இந்த திரைப்படம்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் மட்டுமல்ல மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, நடிகர்களான ரஜினி, சிவாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதனால் மருதநாயகம் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. மேலும்  படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற இங்கிலாந்து ராணிக்கு மருதநாயகம் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக்காட்சியையும் போட்டுக் காண்பித்து பிரமிக்க வைத்தனர்.

Also Read: தங்கலான் படத்திற்கு பின் அடுத்த பட இயக்குனரை லாக் செய்த விக்ரம்.. மகனால் தந்தைக்கு அடித்த ஜாக்பாட்

எனவே பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட மருதநாயகம் படத்தை தற்போது மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது. அதிலும் கமலுக்கு பதில் இதில் சியான் விக்ரம் தான் நடிக்கிறார் என்ற தகவல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. அது மட்டுமல்ல 26 வருடங்களுக்குப் பிறகு மருதநாயகம் படத்தை கையில் எடுத்திருக்கும் கமலஹாசன் இந்த முறை எந்த பிரச்சனையும் வரவிடாமல் தீவிரம் காட்டப் போகிறார். ஏற்கனவே இந்த படத்தில் மிக முக்கியமான 30 நிமிட காட்சிகள் படமாக்கப்பட்டது .ஆனால் அந்த காட்சிகளும் படத்தில் இடம் பெறும் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல மருதநாயகம் படத்தில் மிகக் கடினமான காட்சிகளான அந்த 30 நிமிட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதாம். ஆகையால் மீதமிருக்கும் காட்சிகளை சுலபமாக எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையும் உலக நாயகனுக்கு ஏற்பட்டுள்ளது. விக்ரமுடன் இந்த படத்தில் இன்னும் சில பிரபலங்கள் இணைந்து நடிக்கப் போகின்றனர். இவற்றையெல்லாம் விக்ரம் படத்தில் உலக நாயகனுடன் இணைந்து ஏஜென்ட் ஆக நடித்த நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதி சமீபத்திய பேட்டி ஒன்றில்  தெரிவித்துள்ளார்.

Also Read: கமலுடன் இருக்க ஆசைப்படும் விக்ரம் பட நடிகை.. உலகநாயகன் மீது இப்படி ஒரு கிரஷா?

- Advertisement -

Trending News