புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பல சாதனைகளை முறியடித்த விக்ரமின் 50 நாள் வசூல்.. ரீ என்ட்ரியில் பட்டையை கிளப்பிய ஆண்டவர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் அவருக்கு ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது சொல்லப்போனால் அவரின் இந்த மறுபிரவேசம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தற்போது திரையுலகில் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகர்களாக இருக்கின்றார்கள். இந்த போட்டிகளுக்கு நடுவில் வெளிவரும் விக்ரம் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை காண பலருக்கும் ஆவலாக தான் இருந்தது.

ஆனால் பலரும் எதிர்பார்க்காத வகையில் கமல் அவர்களை எல்லாம் ஓரம் கட்டி இன்று பாக்ஸ் ஆபிஸை கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி ஐம்பது நாட்கள் ஆன பிறகும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் யாருக்கும் குறையவில்லை.

உலக அளவில் கிட்டத்தட்ட 450 கோடி வரை வசூல் செய்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் உலக நாயகன் மட்டும்தான்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மனதை கவர்ந்த ஆல் டைம் பேவரைட் படமாக இருக்கிறது. அந்த அளவுக்கு இப்படம் குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்படி ஒரு வெற்றியை கமலே எதிர்பார்க்கவில்லை என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வெற்றி தனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் உலக நாயகனின் அடுத்த ஆட்டத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News