வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவை கலக்கி வந்த பொன்னியின் செல்வன் 2 தற்போது திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காகவே இப்போது தியேட்டர்களில் கூட்டம் கரைபுரண்டு கொண்டிருக்கிறது. அதிலும் படத்தை பார்த்த ரசிகர்கள் சொல்ல வார்த்தை இல்லை என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இப்படி முதல் நாளிலேயே பட்டையை கிளப்பி வரும் இந்த படத்தில் விக்ரமின் நடிப்பு பலரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. முதல் பாகத்தில் இவருக்கு அதிக அளவு காட்சிகள் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பார்ட் 1 அனைத்து கதாபாத்திரங்கள் பற்றிய ஒரு அறிமுகமாகத்தான் இருந்தது.

Also read: களை கட்டும் சோழர்களின் வரலாறு.. பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

ஆனால் இந்த இரண்டாம் பாகம் அதையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு மிரட்டலாக இருக்கிறது. அதிலும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் சோழ வம்சத்தையே கருவறுக்க காத்திருக்கும் நந்தினி, ஆதித்த கரிகாலனை நேருக்கு நேர் சந்திக்கும் அந்த காட்சி வேற லெவலில் இருக்கிறது.

முதல் பாகத்திலேயே நந்தினியின் கதாபாத்திரம் தான் பலரையும் ரசிக்க வைத்தது. அதிலும் கொடிய விஷமுள்ள பாம்புக்கு இணையாக வஞ்சத்தை தேக்கி வைத்து தக்க தருணத்திற்காக காத்திருக்கும் அந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராயின் பங்களிப்பு கச்சிதமாகவே பொருந்தி இருந்தது.

Also read: அமிதாப் பச்சன் பேத்திக்கு இப்படி ஒரு பிரச்சனையா.? கோர்ட் வரை சென்ற ஐஸ்வர்யா ராய்யின் மகள்

அதைத்தொடர்ந்து ஆதித்த கரிகாலனை அவர் சந்திக்கும் காட்சி எப்படி இருக்கும் என்பதை காண அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் அந்தக் காட்சியை வைத்து மணிரத்தினம் ஒட்டுமொத்தமாக மிரட்டி இருக்கிறார். அந்த வகையில் கல்கியின் நாவலுக்கு அவர் சரியான நியாயம் சேர்த்து இருக்கிறார்.

இப்படி இந்த இரு கேரக்டர்களும் இரண்டாம் பாகத்தை மிரள விட்டிருக்கிறது. அதை தொடர்ந்து சோழ அரியணை யாருக்கு சொந்தம் என்கிற டிவிஸ்ட்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி முதல் பாகத்தை மிஞ்சும் அளவுக்கு வெளியாகி உள்ள இரண்டாம் பாகம் ரசிகர்களால் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Also read: அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங்.. வசூல் மட்டும் இத்தனை கோடியா

Next Story

- Advertisement -