விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் மக்கள் ஆர்வத்துடன் விரும்பி பார்ப்பதுண்டு. மேலும் மேலும் மக்களை குஷிப்படுத்த விறுவிறுப்பான கதைக்களம் சுவாரசியமான சம்பவங்கள் என பல எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு சுவாரஸ்யத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இரண்டு விறுவிறுப்பான சீரியல்களும் மகா சங்கத்தில் இணைய தயாராகி வருகின்றன.விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும்.
தற்பொழுது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தத் தொடர்களை மேலும் பரபரப்பாக்க மகா சங்கத்தில் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பொழுது புதிதாக ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும். தற்பொழுது இந்த சீரியலில் கார்த்திக்- வசுந்தரா திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் பல சுவாரசிய சம்பவங்களும் நிகழ உள்ளன.
அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் தற்பொழுது தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாஞ கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேலும் இந்த சீரியல்களை சுவாரஸ்யமாக இவ்விரண்டையும் மகா சங்கத்தில் இணைக்க உள்ளனர். இன்னும் இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில் இந்த மகாசங்கம எபிசோடுக்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.