சொந்த உறவுகளையே தூக்கி விடாத 5 உச்ச நட்சத்திரங்கள்.. வாய்ப்பு கொடுத்தும் நன்றியை மறந்த விஜய்யின் தம்பி

பொதுவாக சினிமாவிற்குள் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதற்குப் பின்னணியில் யாராவது இருந்து தூக்கி விட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் எடுக்கும் விடாமுயற்சியால் வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சில நடிகர்களுக்கு சொந்தக்காரர்கள் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் அவர்களை தூக்கி விடவில்லை. அப்படிப்பட்டவர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

பிரசாந்த்- விக்ரம்: 90ஸ் காலகட்டத்தில் பிரஷாந்த் டாப் ஸ்டார் ஆக முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சினிமாவில் பல தோல்விகளை பார்த்து வந்து கொண்டிருந்தார் விக்ரம். இவர் பிரசாந்தின் அப்பா வழி நெருங்கிய சொந்தக்காரர். ஆனாலும் அந்த நேரத்தில் விக்ரமுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் தான் தவிக்க விட்டிருக்கிறார். இருந்தாலும் விக்ரமின் விடாமுயற்சியால் தற்போது ஆலமரம் மாதிரி ஜொலித்து முன்னணி ஹீரோவாக வந்திருக்கிறார்.

Also read: கோடிக்கணக்கில் கடனில் தத்தளிக்கும் 5 படங்கள்.. ஆணியே புடுங்க வேண்டாம்னு கப்பிச்சிப்புன்னு இருக்கும் விக்ரம்

அஜித்- ரிச்சர்ட்: முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இவருடைய மனைவி ஷாலினியின் மூத்த அண்ணனாக ரிச்சர்ட் ரிஷி சில படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் கதை நன்றாக இருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அத்துடன் பெரிய படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு இவரை தேடி வருவது இல்லை. ஆனால் இதில் நான் தலையிட மாட்டேன் என்று அஜித் இவருக்கு எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கியே இருக்கிறார்.

விஜய்- விக்ராந்த்: விஜய்யின் தம்பியாக அறிமுகமான விக்ராந்த் நடித்த ஒரு சில படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பரிச்சயமானார். ஆனால் இவருக்கு சொல்லும் படி தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. ஆனாலும் என்னுடைய அண்ணன் விஷால் தான் என்று இவரை தூக்கி வைத்து விஜய்யை வெறுத்து பேசி வருகிறார். அதன் பின் விஜய் எப்படியும் போ என்று தண்ணி தெளித்துவிட்டார்.

Also read: கமல் போல் பல கெட்டப்புகளை போட்டு நடித்த அஜித்தின் 5 படங்கள்.. கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அந்த ஒரு கேரக்டர்

பி வாசு- சக்தி: எத்தனையோ முன்னணி நடிகர்களுக்கு தனது படைப்பின் மூலம் தூக்கி நிறுத்தியவர் தான் பி வாசு. அப்படிப்பட்ட இவருக்கு தன்னுடைய பையன் சக்தியை ஒரு ஹீரோவாக கொண்டு வர முடியவில்லை. ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலும் அப்படியே இருக்கும் இடம் தெரியாமல் சினிமாவை விட்டு போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார். அட்லீஸ்ட் பிக் பாஸ்க்கு போன பிறகு கொஞ்சம் பிரபலம் ஆகுவார் என்று பார்த்தால் அங்கேயும் போயி பெயரை கெடுத்துக் கொண்டுதான் வந்தார்.

பாரதிராஜா- மனோஜ்: தமிழ் சினிமாவில் முக்கால்வாசி முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்தி விட்டவர் இயக்குனர் பாரதிராஜா தான். இவர் மூலமாகத்தான் தற்போது வளர்ந்து நிற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமலஹாசன். அப்படிப்பட்ட இவரால் இவருடைய மகன் ஹீரோ ஆவதை பார்க்க முடியாமல் தவித்து வந்திருக்கிறார். இவரும் ஒன்று இரண்டு முயற்சிகளை எடுத்து மகனை ஹீரோவாக அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அது அவருக்கு ஒத்துவராமலே போய்விட்டது.

Also read: நெல்சனை ஃபாலோ பண்ணும் அட்லீ.. விஜய்யால் அதிர்ந்த ஜவான் மேடை

Next Story

- Advertisement -