ரேஸ்ல ஃபர்ஸ்ட் போறது முக்கியம் இல்ல, ஜெயிக்கணும்.. வாரிசை பற்றி விஜய்யின் கணிப்பு

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் ஆக்சன் படங்களை தவிர்த்து விட்டு மாறாக குடும்ப செண்டிமெண்ட் படத்தில் நடிக்கலாம் என்று முடிவெடுத்து விஜய் தேர்வு செய்த படம் தான் வாரிசு. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

ஆனால் வாரிசு படத்தில் கமிட்டானதும் போதும் விஜய்யை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் தெலுங்கு மொழியில் அங்குள்ள நடிகர்களின் படங்கள் தான் பண்டிகை காலங்களில் வெளியாகும் என்ற சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து தமிழிலும் வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவு படம் வெளியாகிறது.

Also Read :வாரிசு படத்தால் படாத பாடுபடும் விஜய்.. தமனால் வந்த அடுத்த பிரச்சனை

இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலுமே வாரிசு படத்தை எப்படி வெளியிடுவது என படக்குழு பிரச்சனையை சந்தித்தது. ஒருவழியாக படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்சை தவிர மற்ற எந்த பிரமோஷன் வேலையையும் படக்குழு ஈடுபடவில்லை.

இந்நிலையில் விஜய்யின் மேலாளராக இருந்த ஜெகதீஷ் அவரின் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளார். அவரிடம் விஜயின் ரசிகர் போன் செய்து வாரிசு படத்தை பற்றி பேசி உள்ளார். அதாவது வாரிசு படம் தொடங்கியதில் இருந்தே பிரச்சனை சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் படத்திற்கான டீசர், ப்ரோமோ வீடியோ எதுவுமே வெளியாகவில்லை.

Also Read : முதல் நாள் புக்கிங் வசூல் விவரம்.. துணிவுடன் சொன்ன கணிப்பை தவுடு பொடியாக்கியதா வாரிசு.?

வாரிசு படத்தை எப்படி ரசிகர்களிடம் கொண்டு செல்ல போகிறீர்கள் என்ற குழப்பத்தில் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஜெகதீஷ், இங்கு நடக்கும் அனைத்துமே விஜய்க்கு தெரியும். கண்டிப்பாக வாரிசு படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதுமட்டுமின்றி வாரிசு நல்ல படமாகவும், நீண்ட காலமாக தியேட்டரில் ஓடும் படமாக அமையும் என விஜய் கூறியுள்ளார்.

அதாவது விஜய் வாரிசை வைத்து முதல் நாள் கலெக்ஷன் அதிகமாக வர நினைக்கவில்லை. ஆனால் வாரிசு படம் நிறைய நாட்கள் ஓடி அதிக வசூலை அடையும் என்ற நம்பிக்கையில் உள்ளார் என்று தெரிகிறது. ரேஸில் ஃபர்ஸ்ட் போறது முக்கியமில்லை, கடைசில யாரு ஜெயிக்கிறாங்கன்றது தான் முக்கியம் என்பது போல ஓவர் ஆல் கலெக்ஷனில் வாரிசு படம் தான் வெற்றி பெறும் என்று விஜய் கணித்துள்ளார்.

Also Read : முன்கூட்டியே சுதாரித்துக் கொண்ட முதலாளிகள்.. துணிவு ரிலீஸ் பார்த்து, அடிக்கு மேல் அடி வாங்கும் வாரிசு

Next Story

- Advertisement -