Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாரான விஜய்யின் அம்மா.. என்னடா இது புதுசு புதுசா உருட்டுறீங்க!

விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றியை கண்ட, படத்தில் அம்மா கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

vijay-varisu

Actor Vijay: தன் நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டுப்படுத்தும் விஜய் தற்போது அரசியலில் மேற்கொண்டு பல நற்பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் விஜய்யின் அம்மா குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

தற்போது அரசியலில் நாட்டம் கொண்ட விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவரின் வாரிசு படத்தில் அம்மா கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தான் ஜெயசுதா. தெலுங்கு நடிகையாய் அறிமுகமான இவர் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

Also Read:  எங்க சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியே நெல்சா.. ஜெயிலர் வீடியோவை பார்த்துட்டு கொத்து பரோட்டா போட்ட பயில்வான்

அவ்வாறு அக்காலத்தில் முன்னணி கதாநாயகியாய் வலம் வந்து இவர் தற்பொழுது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் ஒரு கட்சியில் நிலையாய் இல்லாமல் பல கட்சிகளுக்கு தாவி வருகிறார். அவ்வாறு 2009ல் ஆந்திர மாநில சட்டசபை எலக்ஷனில் காங்கிரஸில் நின்று தேர்ச்சி பெற்று எம்எல்ஏ வாய் மாறினார்.

அதன் பின் தெலுங்கு தேசம் பார்ட்டி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் பார்ட்டியில் சேர்ந்தவர். அந்த வரிசையில் தற்போது ஜெயசுதா பிஜேபி கட்சியில் இணைந்துள்ளார். இது இவருக்கு நான்காவது கட்சியாகும். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அவற்றை தூக்கி எறிந்து விட்டு தற்பொழுது பிஜேபி யில் இணைந்துள்ளார்.

Also Read:  அஜித், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து துணிக்கடையை நடத்தி வரும் நடிகை.. மொத்தமாக கைநழுவி போன வாய்ப்புகள்

இதைப் பார்க்கையில், தற்பொழுது வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயசுதா போட்டியிட முடிவெடுத்துள்ளார். மேலும் இவருக்கு சீட்டு வழங்க பிஜேபி முனைப்பு காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது. அவ்வாறு வாரிசு படத்தில் எளிமையான கதாபாத்திரத்தில் நடித்த விஜய்யின் அம்மாவா இது என வியக்கும் அளவிற்கு அரசியலில் பட்டைய கிளப்பி வருகிறார்.

அதைத்தொடர்ந்து நல்ல வேலை இவர் தமிழ்நாட்டில் இல்லை, இருந்திருந்தால் தற்போது குஷ்புவிற்கு போட்டியாக தான் இவர் நின்றிருப்பார் என வலைதளத்தில் கிண்டல் அடித்து வருகின்றனர். இதுபோன்று தன் தனிப்பட்ட திறமைகளை வெளிகாட்ட சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது புதிது ஒன்றும் இல்லை என கூறப்படுகிறது.

Also Read:  வாய மூடிக்கிட்டு இருக்கணும், ஹூகும்!. நெல்சனுக்கு டைகர் முத்துவேல் பாண்டியன் போட்ட ஆர்டர்

Continue Reading
To Top