2023-ஐ கலங்கடித்த டாப் 10 படங்கள்.. லோகேஷை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் தம்பி

Top 10 Familiar Movies In 2023: இந்த வருடத்தை இரண்டு பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களின் துணிவு, வாரிசு வெளியாகி அமோகமாக தொடங்கி வைத்தது. அதை தொடர்ந்து பல வெற்றி படங்கள் பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. அதில் இந்த வருடத்தை கலங்கடித்த டாப் 10 படங்கள் என்ன என்ற பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது.

இதில் பலரும் எதிர்பார்க்காத வகையில் நம்ம ஊரு அட்லியின் ஜவான் முதல் இடத்தை தட்டி தூக்கி கெத்து காண்பித்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் 1148 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. இதன் மூலம் அட்லி தனக்கு எதிராக வரும் நெகட்டிவ் விமர்சனங்களையும் தூக்கி வீசி இருக்கிறார்.

இதற்கு அடுத்து ஷாருக்கானின் பதான் 2-வது இடத்தையும், ரன்வீர் சிங்கின் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. 4-வது இடத்தில் லோகேஷ், விஜய் கூட்டணியின் லியோ இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான இப்படம் 600 கோடியை தாண்டி வசூலித்து சாதனை படைத்தது.

Also read: அட்லீயை டீலில் விட்ட 3 ஹீரோக்கள்.. 1000 கோடி வசூல் கொடுத்தும் இப்படி ஒரு நிலைமையா?

5-வது இடத்தில் அக்ஷய் குமார் நடித்த ஓஎம்ஜி 2 இருக்கிறது. இதற்கு அடுத்து 6-வது இடத்தை நெல்சன், ரஜினி கூட்டணியின் ஜெயிலர் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் 650 கோடி வரை வசூலித்திருந்தது. இதற்கு அடுத்து சன்னி தியோலின் காதர் 2, 7-வது இடத்தையும், சர்ச்சை கதையான தி கேரளா ஸ்டோரி 8-வது இடத்தையும் பிடித்துள்ளது.

அடுத்ததாக 9-வது இடத்தில் ரன்பீர் கபூரின் தூ ஜுதி மெயின் மக்கர் பிடித்திருக்கிறது. 10-வது இடத்தை அஜய் தேவ்கனின் போலா பிடித்துள்ளது. இதில் விஜய்யின் செல்ல தம்பியான அட்லி லோகேஷை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

காப்பி இயக்குனர் என்று இவரை பலரும் கலாய்த்து வந்த நிலையில் ஜவான் அதற்கான பதிலடியாக இருக்கிறது. இதன் மூலம் அட்லி ஒரு அறிமுக இயக்குனராக பாலிவுட்டில் தன்னுடைய அஸ்திவாரத்தை ஆழமாக போட்டார். அதை தொடர்ந்து தற்போது IMDb வெளியிட்டுள்ள இந்த பட்டியலும் அவருக்கான கௌரவமாக மாறியுள்ளது.

Also read: தொட்டதுக்கெல்லாம் ஜோசியம் பாக்குற ஆளாச்சே.. லோகேஷுக்கு ஏற்பட்ட பெரிய தலைவலி