அட்லீயை டீலில் விட்ட 3 ஹீரோக்கள்.. 1000 கோடி வசூல் கொடுத்தும் இப்படி ஒரு நிலைமையா?

Director Atlee : அட்லீ இப்போது ஹீரோ கிடைக்காமல் அப்செட்டில் இருக்கிறார் என்றால் யாராவது நம்ப முடியுமா. அதாவது தமிழ் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் படங்களை இயக்கினார். அதுவும் கிட்டத்தட்ட சில வருடங்களிலேயே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கானின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் வெளியான ஜவான் படம் கிட்டத்தட்ட 1000 கோடி தாண்டி வசூல் செய்திருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த வாய்ப்பு இவருக்கு குவியும் என எதிர்பார்த்த நிலையில் டாப் ஹீரோக்கள் அட்லீயை கழட்டி விட்டிருக்கின்றனர். அதாவது விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லீ.

விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அரசியல் வேலையில் இறங்கி இருக்கிறார். இதைத்தொடர்ந்து ஷாருக்கானுக்கு இந்த வருடமே மூன்று படங்கள் வெளியாகிறது என்பதால் அடுத்து பிரேக் எடுக்க இருக்கிறார். இதனால் அட்லீக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்து விட்டார்.

Also Read : விஜய்யை நம்பினா வேலைக்காகாது.. பெரிய திமிங்கலத்தை லாக் செய்த அட்லி- ஷாருக்கான்

இதைத்தொடர்ந்து கமலும் இந்தியன் 2, பிக் பாஸ் என மிகவும் பிசியாக இருக்கிறார். இதுதவிர வினோத் படத்தில் வேறு கமல் கமிட்டாகி இருக்கிறார். ஆகையால் இப்போது அட்லீயை கமலும் கைவிட்டார். இதனால் எந்த ஹீரோவும் கிடைக்காததால் போங்கய்யா என்று இவர் மும்பைக்கு கிளம்பி விட்டாராம்.

இப்போது அட்லீ அங்கு கதையை தயார் செய்து கொண்டிருக்கிறாராம். எந்த ஹீரோ ஃப்ரீயாக இருக்கிறார்களோ அவர்களை வைத்து படத்தை எடுத்த முடிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இவருடைய படம் ஆயிரம் கோடி வசூல் செய்தும் இப்படி ஒரு நிலைமையா என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Also Read : கொடூர வில்லனாக நடித்து காமெடி பீஸ்ஸாக மாறிய 5 நடிகர்கள்.. மொட்ட ராஜேந்திரனை ஓட ஓட விரட்டிய விஜய்