நான் தோத்துட்டேன், கேஸை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி.. தமிழ்நாட்டுல சீமானுக்கு தான் சூப்பர் பவர் இருக்கு

Seeman-Vijayalakshmi: கடந்த சில வாரங்களாகவே அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த விஷயம் தான் சீமான், விஜயலட்சுமி பஞ்சாயத்து. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான இவர் தன்னை திருமணம் செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் சீமானுக்கு எதிராக பல ஆதாரங்களை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் ஏழு முறை அவர் தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறி மருத்துவமனை பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.

Also read: நா மட்டுமா.? அந்த ரெண்டு நடிகைகளையும் புரட்டி எடுத்த சீமான்.. கொஞ்சநெஞ்ச மானத்தையும் வாங்கிய விஜயலக்ஷ்மி

இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் தற்போது விஜயலட்சுமி, சீமானை என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவருக்கு அரசியல் பலம் அதிகம். அதனால் நான் வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை விட அவருடைய அதிகாரம் தான் ஓங்கி இருக்கிறது. நான் முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த விவகாரத்தை வேறு மாதிரி கொண்டு சென்றிருப்பேன். ஆனால் இப்போது என்னுடைய தோல்வியை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Also read: 7 முறை கட்டாய கருக்கலைப்பு, புது குண்டை போட்ட விஜயலட்சுமி.. சீமான் சிக்குவாரா.? கடைசியாக எடுத்த அஸ்திரம்

ஆனால் இந்த வழக்கு சம்பந்தமாக சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த சூழலில் திடீரென இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்ற ரீதியிலும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

அந்த வகையில் தற்போது சீமானை எதிர்க்க முடியாமல் விஜயலட்சுமி பின்வாங்கியதை அவருடைய கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் சோசியல் மீடியாவிலும் எங்க அண்ணனை எதிர்க்க யாரும் இல்லை உண்மை ஜெயிக்கும் என்று மீம்ஸ் போட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.

Also read: 5 பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய சீமான்.. பகீர் கிளப்பி இருக்கும் விஜயலட்சுமியின் பேட்டி

- Advertisement -