நா மட்டுமா.? அந்த ரெண்டு நடிகைகளையும் புரட்டி எடுத்த சீமான்.. கொஞ்சநெஞ்ச மானத்தையும் வாங்கிய விஜயலக்ஷ்மி

தற்போது கோலிவுட்டில் பல பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில், சீமான் விஜயலட்சுமியின் பல வருட பிரச்சனை தற்போது பூதகரமாக வெடித்துள்ளது. தமிழில் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக வலம் வந்த இவர், பல தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருகிறார்.

இயக்குனர் சீமான் தற்போது முழு வீச்சாக அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், ஆரம்பத்தில் பல படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில், 2008 ஆம் ஆண்டு வாழ்த்துக்கள் படத்தில் நடித்த விஜயலக்ஷ்மி, சீமான் மீது பழக்கம் ஏற்பட்டு காதல் வலையில் விழுந்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்ட நிலையில், சீமான் தன்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்ற புகாரை கடந்த 2011 ஆம் ஆண்டு விஜயலக்ஷ்மி வழக்கு தொடர்ந்தார்.

Also Read: 7 முறை கட்டாய கருக்கலைப்பு, புது குண்டை போட்ட விஜயலட்சுமி.. சீமான் சிக்குவாரா.? கடைசியாக எடுத்த அஸ்திரம்

இதன் பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் பல வருடங்கள் கிடைக்கும் வேலைகளை பார்த்து வந்த விஜயலக்ஷ்மி, சமீபத்தில் மீண்டும் சீமான் குறித்த வழக்கை விரைந்து முடித்து தனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை காவல்நிலையத்தில் முன் வைத்தார். மேலும் சீமான் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி, கிட்டத்தட்ட 7 முறை அவரால் தான் கருக்கலைப்பு செய்ததாக கூறி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், தன்னை ஏமாற்றிய சீமானை கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கோரினார். இதனிடையே இந்த வழக்கு குறித்து, தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் இவர் தொடர்ந்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் சீமானின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அவரைக் குறித்து சில வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Also Read: தம்பி விளையாட்டா சொன்னத மொத்தமா நம்பிய சீமான் அண்ணன்.. முழு முக்காடு போட்டுட்டு ஓடிய சிம்பு

அதில் மதுரை மீனாட்சி அம்மனின் புகைப்படத்தை வைத்து இந்த அம்மன் மீது சத்தியமாக சீமான் இவரது முன்னிலையில் தான் எனக்கு மாலை மாற்றினார் என கூறி சிறு சலசலப்பை ஏற்படுத்தினார். இதனிடையே சீமான் இயக்குனராக இருந்தபோது 2 நடிகைகளை தன்னைப் போலவே யூஸ் பண்ணிவிட்டதாக விஜயலக்ஷ்மி இன்னொரு வீடியோ போட்டு அந்த நடிகைகளின் பெயர்களை கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

இயக்குனர் சீமான், நடிகர் மாதவன் இயக்கத்தில் தம்பி, வாழ்த்துக்கள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அப்படங்களில் நடித்த நடிகைகளான பூஜா மற்றும் பாவனாவை சீமான் பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என விஜயலக்ஷ்மி கூறி பெரிய குண்டை போட்டுள்ளார். நடிகைகளான பாவனா மற்றும் பூஜா தற்போது திருமணம் செய்துக்கொண்டு செட்டிலான நிலையில், தற்போது அவர்களை தேவையில்லாமல் சீமானுடன் இணைத்து விஜயலட்சுமி பேசி வருவது நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது.

Also Read: 5 பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய சீமான்.. பகீர் கிளப்பி இருக்கும் விஜயலட்சுமியின் பேட்டி

- Advertisement -