நம்பிக்கையை கெடுத்த வடிவேல்.. கன்னத்தில் பளாரென விட்ட கேப்டன்

இன்றுவரை வடிவேல் மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் இருக்கும் உண்மையான பிரச்சனை என்னவென்று தெளிவாக தெரியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் ஒன்றாக நிறைய படங்கள் நடித்தாலும், அதன்பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். விஜயகாந்த் இப்பொழுது உடம்பு சரியில்லாத காரணத்தினால் நடிப்பதில்லை.

விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை, அந்த ஊரில் இருந்து வந்தவர்தான் வடிவேலு. நம்ம ஊரு பையன் நன்றாக வரட்டும் என்று பல படங்களில் விஜயகாந்த், வடிவேலுக்கு வாய்ப்பை அள்ளி அள்ளிக் கொடுத்தார். ஆரம்பத்தில் ஒழுங்காக சென்று கொண்டிருந்த வடிவேலு கொஞ்சம் மார்க்கெட் அதிகமாகவே தனது உண்மையான குணத்தை, விஜயகாந்த்திடமே காட்ட ஆரம்பித்தார்.

தவசி, எங்கள் ஆசான் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது டைரக்டர் சொல்வதை கேட்க மறுத்து விட்டாராம் வடிவேலு. இந்த சீன் நல்லா இல்ல, அந்த சீன் நல்லா இல்லை, என்று அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொண்டுள்ளார்..

அது மட்டுமின்றி வடிவேலு, ராஜ்கிரணுக்கு பண உதவி செய்துள்ளார். அதை நான்தான் அவருக்கு காசு கொடுத்து உதவினேன் என்று எல்லோரிடமும், சொல்லிக் காட்டிக் கொண்டும் வந்தாராம். இதையெல்லாம் கவனித்த கேப்டன் விஜயகாந்த், ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டிலேயே வடிவேலுவின் கன்னத்தில் பளாரென்று அடித்து விட்டாராம்.

அப்பொழுது அமைதியாக இருந்த வடிவேலு, அதன்பின் விஜயகாந்த் படத்தில் நடிப்பதை மறுத்துவிட்டாராம். இதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உண்மையான பிரச்சனை.

அதன்பின் வடிவேல், தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்தை பற்றி தவறுதலாக பேசி அந்த பிரச்சனையை பெரிது படுத்தி விட்டார். தற்போது வடிவேலு அதையெல்லாம் நினைத்து வருத்தப் பட்டதாகவும், கேப்டனிடம் சென்று மன்னிப்பு கேட்டதாகவும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.