Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி மனோஜ் மனசை குழப்பிவிட்டு அம்மாவிடம் பணத்தைப் போய் கேளு என்று சலவை செய்துவிட்டார். அதன்படி மக்கு மனோஜ் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் இந்த வீட்டின் மேல் வாங்கிய கடனுக்கு மேல் இன்னும் 14 லட்சம் ரூபாய் கடன் வாங்கி எனக்கு கொடு.
அதை வைத்து நான் கனடாவிற்கு போய் நல்ல வேலையில் செட்டில் ஆகி எல்லா கடனையும் அடைத்து விடுகிறேன் என்று விஜயாவிடம் சொல்லி கெஞ்சுகிறார். இதைக் கேட்ட விஜயா இந்த மாதிரி எல்லாம் உன்னிடம் பேச சொன்னது யாருடா என்று கேட்க, ரோகிணி தான் உங்களிடம் வந்து கேட்க சொன்னால் என உண்மையை கூறிவிட்டார்.
உடனே விஜயா, உன்ன நம்பி இந்த வீட்டின் மீது என்னால் கடன் வாங்க முடியாது. இது எங்க அப்பா எனக்கு ஆசையாக கொடுத்த சொத்து. அவருடைய ஆத்மா இன்னும் இந்த வீட்டில் தான் சுற்றுகிறது. இனியும் யாருக்காகவும் எதுக்காகவும் இந்த வீட்டை வைத்து நான் கடன் வாங்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார்.
அதற்கு மனோஜ் என் படிப்புக்கு ஏத்த மாதிரி இங்கே எந்த வேலையும் இல்லை நான் என்ன பண்ணுவது என்று கேட்கிறார். உடனே விஜயா, உனக்கு எந்த வேலை கிடைக்கிறதோ அதை உருப்படியாக பண்ணி உருப்பட வழியை பாரு என்று மனோஜை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.
இதனை பார்த்து அண்ணாமலை இப்பொழுது தான் நீ ஒரு பொறுப்பான அம்மாவாக பேசியிருக்கிறாய். இப்படியே ஆரம்பத்தில் மனோஜிடம் பேசி இருந்தால் இந்நேரம் அவன் நல்ல நிலைமைக்கு வந்து இருப்பான். சரி இப்பயாவது ஒரு நல்ல அம்மாவாக புத்திமதி சொல்லி இருக்கிறாய் என்று கூறிவிட்டார்.
விஜயா மனசை குளிர வைத்த முத்து
அத்துடன் முத்துவும் மீனவும் இது அம்மா தான் பேசுகிறார்களா அல்லது நான் பார்க்கிறது கனவா என்று திகைத்துப் போய் நிற்கிறார்கள். இதையெல்லாம் ரோகினி நோட்டமிட்டு திருதிருவென்று முழித்துக் கொண்டு இருக்கிறார். மனோஜை வைத்து போட்ட பிளான் சொதப்பிவிட்டதே என்று நினைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சுருதியை நடுரோட்டில் வம்பு இழுக்கும் ஒருவரை முத்து அடித்து துரத்தி விட்டார். அத்துடன் நீயும் ரவியும் காதலித்தது உண்மை என்றால் இப்படியா தனித்தனியாக இருப்பது. எனக்கும் மீனாக்கும் வராத பிரச்சனையா. ஆனால் இதுவரை அவள் என்னை விட்டுப் போனதே கிடையாது.
நான் செய்தது தவறாக இருந்தாலும் நீ ரவிக்காக வீட்டிற்கு வந்து தான் ஆக வேண்டும் என்று தன்மையுடன் பேசி சுருதி மனசை மாற்றி விட்டார். இதை கேட்ட சுருதி வீட்டிற்கு போய் அப்பா அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டு ரவி இருக்கும் வீடு தான் எனக்கு சொர்க்கம் என்று விஜயா வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
அந்த வகையில் இவர்களை பார்த்த விஜயா இந்த ஒரு விஷயத்தை நினைத்து சந்தோஷப்பட்டு இனி மீனாவை திட்டுவதை குறைத்து விடுவார். இப்படியே போகப் போக விஜயா மனசு கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.