கர்ப்பமான மருமகளை தலை மேல் தூக்கி வைத்து ஆடும் விஜயா.. மீண்டும் பொய் பித்தலாட்டம் பண்ணும் ரோகிணி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து, ஸ்ருதியின் அப்பாவை அடித்து அவமானப்படுத்தியதால் ஸ்ருதி கோபத்துடன் அம்மா வீட்டிற்கு போய்விட்டார்.

பின்னாடியே ரவியும் போயி சமாதானப்படுத்துகிறார். ஆனால் ஸ்ருதி, என் அப்பா தப்பாவாக பேசியிருந்தாலும் உன் அண்ணன் முத்து கை நீட்டியது தப்புதான். அதனால் அந்த வீட்டிற்கு என்னால் வந்து இருக்க முடியாது.

அதே நேரத்தில் நீ அங்க போயிட்டு வந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. அது உன்னுடைய இஷ்டம் என்று தெளிவான பதிலை கூறிவிட்டார்.

இதனை தொடர்ந்து முத்து மற்றும் மீனாவையும் இந்த ஒரு விஷயத்தை வைத்து விஜயா வீட்டை விட்டு போக சொல்கிறார்.

ஆனால் முத்து, நாங்கள் போக வேண்டும் என்றால் எங்களுடன் சேர்ந்து என் அப்பாவையும் கூட்டிட்டு போய் விடுவேன் ஓகேவா என்று கேட்டு விஜயா வாயை அடைத்து விட்டார்.

இதனால் விஜயா அடுத்து எதுவும் பேச முடியாமல் முத்து மீனாவை தங்குவதற்கு அனுமதி கொடுத்து விடுகிறார்.

விஜயாவிடம் தப்பித்த ரோகிணி

ஆனால் இவர்களை பொருத்தவரை தனிக்குடித்தனம் போனால் மட்டும்தான் சந்தோஷமாக இருக்க முடியும்.

பிறகு ரோகிணி, விஜயாவிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்கு ஒரு விஷயம் கிடைத்து விட்டது.

அதாவது ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததும் விஜயா, மனோஜ்க்கு வாழ்த்து சொல்லி சந்தோசப்படுகிறார்.

அத்துடன் பாட்டி சொன்ன மாதிரி முதல் வாரிசு யார் பெற்றெடுத்து கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு என்னுடைய சொத்தை கொடுப்பேன் என்று சொன்னதும் விஜயாவுக்கு இன்னும் அதிகமான பூரிப்பு ஏற்பட்டு விட்டது.

ஆனால் ரோகினி கர்ப்பமாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் விஜயாவிடம் தப்பித்துக் கொள்ள இந்த ஒரு விஷயம் பாதுகாப்பாக இருக்கும் என்று மறுபடியும் பொய்ப் பித்தலாட்டம் சொல்லி ஒட்டுமொத்த குடும்பத்தை ஏமாற்றுவதற்கும் ஒரு பிளானை போடுகிறார்.

ஆக மொத்தத்தில் ரோகினி இப்போதைக்கு மாட்டப் போவதில்லை. இன்னும் இதை வைத்து பொய் சொல்லி ஏமாற்றப் போகிறார்.

Sharing Is Caring:

Leave a Comment

அதிகம் படித்தவை